என்னைத் தாங்குபவரே
நீ அறிவிக்க வேண்டியது; ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது.
லேவியர் 4-2.
ஆண்டவர் இந்த நூல் முழுவதும் பாவ பரிகாரமும் மன்னிப்பும் பற்றி கூறுகிறார். பழைய ஏற்பாட்டின் நாட்களிலே பாவத்தின் தன்மைக்கு ஏற்ப பரிகாரங்களும், பலியிடு தலும் அமைந்தது.
இயேசு தன்னையே மனுக்குலத்தின் பாவப்பரிகார பலியாக ஒப்பு கொடுத்த பிறகு, அது மாறியது.
இயேசு சீடர்களை நோக்கி, “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என சொல்லி அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்..எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
எனவே பாவ மன்னிப்பு என்பது இஸ்ரேல் மக்கள் காலத்திலிருந்து ஆண்டவரால் மோசே மூலம் உருவாக்கப்பட்டது. அந்நாட்களில் ஆடு மாடு தானிய படையல்கள், நீர்ம படையல்கள் பாவ பரிகார பலியாக குருக்கள் மூலம் அளிக்கப்பட்டது
கிறிஸ்துவுக்கு பிறகு நாம் குருவிடம் பாவத்தை அறிக்கையிடுகிறோம். அவர் கிறுஸ்துவின் இடத்தில் இருந்து நம்மை மன்னிகிறார். நாம் பாவத்திலிருந்து விடுபட்டு மனம் திருந்தி வாழ வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம் ஆகும்.
ஆண்டவரே என் பாவங்களை பாராதேயும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். உறைபனியிலும் வெண்மையாவேன்.
மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்;
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். ஆமென்.