இயேசு, நிலைவாழ்வு தரும் அழியா உணவு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு
5 மே 2025
பாஸ்கா3-ம் வாரம் - திங்கள்
தி.பணிகள் 6: 8-15
யோவான் 6: 22-29
இயேசு, நிலைவாழ்வு தரும் அழியா உணவு!
முதல் வாசகம்.
முதல் திருத்தொண்டரான ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார் என்று லூக்கா வாவரிக்கிறார், இவரே இன்றைய இன்றைய முதல் வாசகத்தின் மையமாக உள்ளார். இவர் ஞானத்தோடு பேசக்கூடியவராகவும் இருந்தார் (திப 6: 10) என்று அறிகிறோம்.
இவரோடு வாதாடத்தொடங்கி, முடியாமல் போகவே, சிலர் இவருக்கு எதிராகப் பொய்க்குற்றம் சுமத்துகின்றார்கள்.
பொய்க்குற்றம்:
1. ஸ்தேவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்களை சொன்னார்.
2. “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் கூறக் கேட்டோம்”
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி புனித யோவானின் நற்செய்தியின் ஆறாவது அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். இயேசுவும் அவரது சீடர்களும் கடலோர நகரமான திபேரியாவை விட்டு வெளியேறி கப்பர்நாகூமுக்குப் படகில் சென்றிருக்கக்கூடும் என்று கருதி அவர்களும் அங்கு செல்கிறார்கள். அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்ததும், இயேசுவையும் அவரது சீடர்களையும் காண்கிறார்கள் ‘மக்கள் இயேசுவைத் தேடி வந்தது நல்லதொரு செயல்தானே...?’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவர்களோ மீண்டும் வயிறாற உண்ணலாம் என்று எண்ணியே வந்தனர் என்பதை இயேசு அறிந்தவராக அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். இச்சூழலில், இயேசு அவர்களைப் பார்த்து, “அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்” என்று கூறுகின்றார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் உள்ளபடி, மக்கள் இயேசுவைத் தேடிச் சென்றனர். ஆனால் அவர்களில் சுயநலம இருந்தது இயேசுவைத் தேடவேண்டும். அது முதன்மையானது; இன்றியமையாததும்கூட; ஆனால், அவரை நல்ல எண்ணத்தோடு தேடவேண்டும். “அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்” என்று கூறுகின்றார் இயேசு.
இதல் மிக முக்கிய வெளிப்பாடு என்னவெனில், மக்கள் எதிரப்பாரக்காமல் இருந்தபோது, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார், ஆனால் அவர்கள் அதை எதிர்பார்த்து மறுநாள் வரும்போது, அவர் அதை மறுக்கிறார். ஆம், இயேசு மற்றொரு அற்புதத்தை மறுக்கிறார். ஏனெனில் அவரது அற்புதம் அல்லது வல்ல செயலானது நற்கருணையில் உள்ளதை அவர் வெளிப்படுத்த விரும்புகிறார். நற்கருணையே நிலைவாவுக்கான உணவு என்பதை வலியுறுத்தத் தொடங்குகிறார்
மத்தேயு சற்செய்தி 6:33-ல், ‘அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்’ என்று இயேசு கற்பிக்கிறார். இந்த வார்த்தைகளின் மூலம் அவர் கடவுளின் அனைத்து கொடைகளையும், குறிப்பாக அவருடைய ஆன்மீக கொடைகளைக் குறிப்பிடுகிறார். அதுவே அவரது திருவுடலும் இரத்தமுமாகிய நற்கருணை.
நிலைவாழ்வை அளிக்க வல்ல உணவுக்காக, அதாவது அவருடைய உடல் மற்றும் இரத்தத்திற்காக, பசித்தவர்களுக்கு உணவளிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், சிறைப்பட்டோரை விடுவிக்கவும், நோயாளிகள் மற்றும் முதியவர்களைப் பராமரிக்கவும், தாழ்த்தப்பட்டோர் எனும் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும் மற்றும் பல சமூக நற்பணிகளுக்காக நாம் நற்கருணையைத் (இயேசுவை) தேட வேண்டும். நற்கருணை நம்மில் ஏற்படுத்தும் விளைவு நம்மில் வெளிப்பட வேண்டும்.
முதல் வாசகத்தைப் பற்றி நான் சிந்திக்கும்போது, ஸ்தேவான் உண்மையிலேயே ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு நபர் என்பதை உணரமுடிகிறது. இருப்பினும், ஞானத்துடனும் தைரியத்துடனும் தனது பணியைச் செய்வதில், அவர் எதிர்ப்பைச் சந்திக்கிறார். அவர் நற்கருணையின் மைந்தராக விளங்கினார் என்பதே இதன் பொருள்.
வாழ்க்கையின் மேலோட்டமான மற்றும் முக்கியத்துவம் குறைந்த அம்சங்களில் நம் கவனத்தைச் செலுத்துவது எளிது. எப்படி அதிக பணம் சம்பாதிப்பது? அல்லது ஒரு புதிய கார் வாங்குவது? அல்லது விலையுயர்ந்த ஆடம்பர உணவை உட்கொள்வது? ஆடைகளை உடுத்துவது? என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். ஆனாலும், “அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்” எனும் இயேசுவின் அழைப்பை ஆழச் சிந்தித்துச் செயல்படுவோம். நறக்ருணையில் ஆவல் கொண்ட மக்களாக உருமாற்றம் பெறுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நான் உம்மையே நம்புகிறேன். உமது திருவுடலிலும் இரத்தத்திலும் பற்றுறுதி கொள்கிறேன். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
