கத்தோலிக்கர்கள் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அரவணைத்துக்கொள்ளுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ்

பப்புவா நியூ கினியாவின் கத்தோலிக்கர்கள் நம்பிக்கையையும்  ஒற்றுமையையும் அரவணைத்துக்கொள்ளுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ் 

பாப்புவா நியூ கினியா மக்கள் தங்கள் இதயங்களை கடவுளிடம் வெளிப்படுத்தி  பயத்தை உதறித்தள்ளிவிட்டு  ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, சர் ஜான் குய்ஸ் மைதானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  மறையுரை ஆற்றினார்.

பேச்சுக் குறைபாடு உள்ள ஒரு காதுகேளாத மனிதனை இயேசு குணப்படுத்தியதைக் குறிப்பிடும் அன்றைய நற்செய்தியைப் பற்றி நினைவுகூர்ந்த திருத்தந்தை (மாற்கு 7:31-37), இரண்டு முக்கிய கருப்பொருள்களை எடுத்துரைத்தார்: முதலாவதாக சமூகத்திலிருந்து மனிதனின் தூரம் இரண்டாவதாக  இயேசுவின் அருகாமை. 

மக்களோடு திருத்தந்தை

காதுகேளாத மனிதனின் தனிமைப்படுத்தலை, இன்று மக்கள் அடிக்கடி சந்திக்கும் ஆன்மீகத் தடைகளுடன் ஒப்பிட்டார். "நம் இதயங்கள் தடுக்கப்படும் போது நாமும் கடவுள் மற்றும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மற்றும் நட்பில் இருந்து துண்டிக்கப்படலாம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார், சுயநலம், அலட்சியம் மற்றும் பயம் போன்ற குணநலன்களே கடவுளிடம் ஏற்படும் தூரத்திற்கு பொதுவான காரணங்கள் என்று கூறினார்.

பப்புவா நியூ கினியாவின் நம்பிக்கையின் செய்தி

பாப்புவா நியூ கினியா மக்களிடம் திருத்தந்தை  பிரான்சிஸ் நேரடியாக உரையாற்றினார், சில சமயங்களில் அவர்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணரலாம், ஆனால் அவர்கள் கடவுளின் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்  என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார். 

"இன்று, இறைவன்  உங்களிடம் நெருங்கி வர விரும்புகிறார், நீங்கள் அவருடைய இதயத்தின் மையத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் ஒவ்வொருவரும் அவருக்கு முக்கியமானவர்கள் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக," என்று அவர் கூறினார்.

 அன்னையிடம் செபிக்கும் திருத்தந்தை


நம்பிக்கை தடைகளை வென்று ஒற்றுமையை மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட  திருத்தந்தை  பிரான்சிஸ்,  திறந்த மற்றும் தகவல்தொடர்பு சமுதாயத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார். "இவ்வாறே, நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும், ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்கவும் முடியும். 

பெரும் சவால்களுக்கு மத்தியில் பப்புவா நியூ கினியாவிற்கு நற்செய்தியைக் கொண்டு வந்த இத்தாலிய மறைபரப்பு பணியாளர் வணக்கத்துக்குரிய ஜான் மஸ்ஸுக்கோனியின் பரிந்துரை  மூலம் நிறைவேறும் என்று கூறி திருத்தந்தை  நிறைவு செய்தார். 

மஸ்ஸுக்கோனியின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றவும், மீட்பின்  செய்திக்கு தங்கள் இதயங்களைத் திறக்கவும் அவர் மக்களை ஊக்குவித்தார், அதனால் அவர்கள் "கடவுளின் அன்பைப் பாடுவதற்கு தங்கள் நாவைத் தளர்த்த வாய்ப்பு வந்துள்ளது என்று கூறினார். 

பாப்புவா நியூ கினியா இறைமக்கள் நம்பிக்கை  மற்றும் ஒற்றுமையின் உருமாறும் சக்தியைத் தழுவுவதற்கான அவரது அழைப்புக்கு செவிசாய்ப்பதால், திருத்தந்தை பிரான்சிஸின் வருகை தொடர்ந்து நம்பிக்கையையும் புதுப்பிப்பையும் தூண்டுகிறது.