போரை எதிர்ப்பதே தேசபக்தி! ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2025

போரை
எதிர்ப்பதே தேசபக்தி!
ஒரு இந்தி தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
ஐந்து மணி நேரமும் விமானங்கள் பறந்து வந்து குண்டு போடுவது,
வெடித்து சிதறுவது ,
இடை இடையே தேசியக் கொடியை ஆட்டி ஆட்டி வர்ணனை என போர்ப் பாட்டு பாடுவதாக இருந்தது.
சித்தரிக்கப் பட்ட ஒரு காட்சியை அவ்வளவு நேரம் ஒரு தொலைக்காட்சி காட்டுவதன் நோக்கம் என்ன?
அவர்கள் மக்கள் மனதில் எதை விதைக்கின்றார்கள்?
தொலைக் காட்சியில் உள்ளவர்கள் மனநோயாளிகளா?
அதை பார்க்கும் மக்களா?
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் இறந்து போன குடும்பத்தினர்
காஷ்மீரி களையோ,
முஸ்லீம்களை எதிரிகளாக பெய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கின்றனர்.
ஒன்றிய ஆட்சியாளர்கள் போருக்கு தயாராகின்றனர் என சமூக வலைதளங்களில் செய்தி வருகிறது.
போருக்கு ஒரு நாட்டையும் அதன் மக்களையும் தயார் செய்வதன் பின்னணியில்.
அரசியல், பொருளாதார நலன் இருக்கிறது.
பன்னாட்டு ஆயுத வர்த்தகர்களுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் வணிகம் உள்ளது.
ஆனால் போரில் ஈடுபடும் நாட்டின் மக்களுக்கு சாவும், வறுமையும் மட்டுமே மிஞ்சும்.
பாலஸ்தினமும் உக்ரைனும் சாட்சி.
இந்தியாவை அதன் அண்டை நாடுகளுடன் போரில் சிக்கவைக்க அமெரிக்கா வெகுகாலமாக திட்டமிட்டு வருகிறது.
யுக்ரைன் போரை அது திட்டமிட்டு உருவாக்கியது.
உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை போர் தளவாடங்களுக்கு ஈடாக
எழுதிக் கேட்கிறார் டிரம்ப்.
அமெரிக்கா போரால் வாழ்கிறது.
காஷ்மீர் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை எதுவுமே நடக்காமல் போர் போர் என கூச்சல் இடுகின்றன.
இந்தியாவிற்கு மருத்துவம் பார்க்க வந்த பாக்கிஸ்தான் தாய் குழந்தையை பிரிய முடியாது அழுகின்றார்.
தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்
தாய் பாக்கிஸ்தான் திருப்பி அனுப்ப படுகின்றார்.
வாகா எல்லையில் பலரை பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது.
அவர்கள் ஒரே நாளில் நாடற்றவர்கள் ஆகின்றனர்.
சிந்து நதியை நிறுத்து!
காஸாவைப்போல் குண்டு வீசு
என சிலர் அலறுகின்றனர்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக ஈழத்து போரை பார்த்த தமிழர்கள் போரின் கோரத்தை அறிந்தவர்கள்.
அதன் துயரம் இன்னும் நமது எண்ணங்களில் தேங்கி நிற்கிறது.
போர் துவங்கினால் அது கடும் அவலங்கள் இன்றி முடிவதில்லை.
அமெரிக்கா இந்தியாவை போரை நோக்கி தள்ளுகிறது.
நாம் துணிந்து போர் வெறியை எதிர்ப்போம்.
மனிதர்கள் இரத்தம் சிந்துவதை தடுப்போம் .
போரை மறுப்போம்.
போர் சுதந்திர உணர்வுக்கு எதிரானது.
போரை எதிர்ப்பதே தேச பக்தி.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
