உறவுப்பாலம்

  • உருவாக்கும் இறைவன்

    Jul 22, 2020
    நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.

    தொடக்க நூல்50-20.
  • ஆண்டவரே பேசும்

    Jul 19, 2020
    அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்; அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றார்.

    தொடக்க நூல் 37-9.
  • திட்டமிட்டு ஆண்டவரே

    Jul 18, 2020
    கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.

    தொடக்க நூல் 35-11.
  • உம் கரத்தில்

    Jul 17, 2020
    ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.

    தொடக்க நூல் 33-4.
  • மத சார்பற்ற நற்செயல்

    Jul 16, 2020
    பொதுவாக, நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களில், வீரர்கள் தங்களின் உயிரை விடுவது என்பது மனதிற்கு கவலை அளித்தாலும், நடந்தேறும் போர்களில், வீர்கள் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாளை கழிப்பது என்பது கடினமான செயலே ஆகும். அப்படி இருக்கும் வீரர்களுக்காகவே பணியாற்றி வருகின்றனர், வியட்நாமைச் சேர்ந்த கத்தோலிக்க அமைப்பினர்.
  • துணை நீரே

    Jul 15, 2020
    அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.

    தொடக்க நூல் 32-10.
  • உதவும் ஆண்டவரே

    Jul 14, 2020
    ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.⒫

    தொடக்க நூல் 22-1
  • காக்கும் கடவுள்

    Jul 13, 2020
    அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.

    தொடக்க நூல் 21-17.
  • இனிய வேண்டல்

    Jul 12, 2020
    அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.⒫

    தொடக்க நூல் 18-32.
  • காண்கின்ற இறைவன்

    Jul 11, 2020
    அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.

    தொடக்க நூல் 16-13.
  • உருவாக்கும் இறைவன்

    Jul 10, 2020
    அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.

    தொடக்க நூல் 15-5.
  • நினைவுக்கூறுபவரே

    Jul 09, 2020
    கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.

    தொடக்க நூல் 8-1.
  • எல்லாம் நீரே

    Jul 08, 2020
    அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

    தொடக்க நூல் 7-1.
  • முழு மனதோடு

    Jul 06, 2020
    ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

    தொடக்க நூல் 4-4
  • அளவில்லா நேசம்

    Jul 05, 2020
    ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.

    எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.

    தொடக்க நூல் 3-21, 23
  • உறவின் இறைவன்

    Jul 03, 2020
    கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

    தொடக்க நூல் 1-27
  • அமைதியின் தூதனாய்

    Jul 01, 2020
    ஆண்டவரே உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும். எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும் எங்கு மனவருத்தம் உள்ளதோ, அங்கு மன்னிப்பையும் எங்கு சந்தேகம் உள்ளதோ, அங்கு நம்பிக்கையையும் எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும் எங்கு துன்பம் உள்ளதோ, அங்கு இன்பத்தையும் நான் பரப்ப அருள்தாரும்.