நல்ல விதையாக

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,

இணைச்சட்டம் 11-13

ஆண்டவருடைய கட்டளைகளை வழுவாது பின்பற்றினால் ஆண்டவர் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். தக்க காலத்தில் அவர் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால்  தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேகரிப்போம்.  வயல்வெளிகளில் நம் கால்நடைகளுக்கு அவர் புல் தருவார். நாம் உண்டு நிறைவு கொள்வோம்..

நம்மிடையே நோய் இருக்காது. துன்பம் இன்பமாக மாறும்.ஆண்டவரின் வல்லமை நம் மீது நிழலிடும். நமக்கு எதிராக எழும்பும் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகும். ஆண்டவருடைய ஓங்கிய புயமும், பலத்த கரமும் நம்மை காத்து நடத்தும். 

எனவே ஆண்டவரின்  வார்த்தைகளை நம் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துவோம். அவற்றை நம் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்வோம். 

அவற்றை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். .  வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பற்றி பேச தியானிக்க முயற்சி செய்வோம்.

 

ஆண்டவரே, என் அடைக்கலமானவரே, உம்மை போற்றுகிறேன். உம் வார்த்தைகளை என் இதயத்தில் சுமந்து செல்ல அருள் தாரும். அலகை வந்து அந்த வார்த்தைகளை எடுத்து செல்லாது நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக நூறு மடங்கு ஆயிரம் மடங்கு பலன் கொடுக்க செய்தருளும்.  ஆசீர்வதியும் . ஆமென்.