கடவுள் அவர்களில் புதிய ஆவியைப் பொழிவார் என்பது, கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதற்கான புதிய மனநிலை அல்லது அணுகுமுறையை அருளவுள்ளார் என்று பொருள்கொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு குறிப்பிடும் நிலக்கிழார் எவ்வளவு வித்தியாசமானவர். ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு நியாயமானதை மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல், கடைசி மணி வரை வேலை தேடி தம்மிடம் குறைந்த நேரம் வேலை செய்தவருக்கும் அதே ஊதியத்தைக் கொடுக்கிறார்.
இயேசுவின் சீடர் என்பது எளிமைக்குரியவர். இங்கே எளிமை என்று நான் கூறியது தோற்றம் மட்டுமல்ல மாறாக, நடத்தை. ‘எளிமையாக வாழ்ந்து என்னத்த சாதித்துவிட்டாய்?’ என்று சிலர் கேட்கலாம். எளிமையாக வாழ்வதே ஒரு சாதனை என்று நமது பதில் இருந்தால் அதற்கான வெகுமதியை ஆண்டவர் அளிப்பார். இந்த மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் காணலாம்.
“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்கின்றார். இயேசுவின் முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இளைஞர் வந்த வழி போகிறான்.
அவர் செவிசாய்க்காவிடில், உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போய் பிரச்சனையைப் பேசி முடிக்கப்பாருங்கள் என்றும், அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருஅவையின் உதவியை நாடுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
கடவுளின் வார்த்தையை எடுத்துக்கொண்டு அதை நம்மில் ஒரு பகுதியாக மாற்றுவது எவ்வளவு இனிமையானது என்பதை இன்றைய பதிலுரைப் பாடலில் கேட்கிறோம். அது தேனை விட இனிமையானது என் விவரிக்கப்படுகிறது.
அன்பு இயேசுவே, நான் போராடும் போதெல்லாம் உம்மேல் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையால் என்னை நிரப்புவதோடு, வரி செலுத்துவதில் நான் நேர்மையாக இருந்திடவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
புனித லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நம்மால் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக நமது சொத்து, செல்வங்களை ஏழைகளோடு பகிர முன்வர இயலுமா? அதற்கான மனம் நம்மில் உள்ளதா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவுக்கு நல்லதொரு பதிலாக, “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றாள் அந்த தாய்.
இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது என்று அவளது மன்றாட்டை ஏற்றார்.
நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், நம்பாமலும் போனதால், அவர் அவர்களிடம் தொடர்ந்து வல்ல செயல்களை அவர் செய்யவில்லை. ஆம். இயேசுவை நாம் புறக்கணித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்கின்றபொழுது நாம்தான் பெரிய இழப்பை அடைகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்
கடவுள் குயவன் என்றும், நாம் களிமண் என்றும், நாம் கடவுளின் கைவேலை என்றும் சிந்திக்கையில் பெருமைபட வேண்டும். ஆகவே, குயவனாக தம்மை வெளிப்படுத்தும் கடவுள் நம்மை அவரது விருப்பப்படி வடிவமைக்கவும் உருவாக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்ட ஒருவரிடம். (மத் 19:21) “உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்று இயேசு கூறியதில், அவன் உடைமைகளை விற்று விண்ணரசு எனும் புதையலையோ முத்தையோ வாங்க விரும்பவில்லை. அவன் உலகைப் பற்றிக்கொண்டு வாழ்வதே பெரிதென கொண்டான்.
‘இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.’ (1 யோவான் 5:1) என்று யோவான் கூறியதை மனதில் கொள்வோம், நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். ஆகவே, இயேசுவே மெசியா என்று உலகெங்கும் அறிக்கையிட கடமைப்பட்டவர்கள்.