வேளாங்கண்ணி திருத்தலத்தில் நடைபெற்ற கத்தோலிக்க மறை மாவட்ட குருக்கள் பேரவை யூபிலி மாநாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய திருத்தலத்தில், இந்திய மறை மாவட்ட குருக்கள் பேரவை தமிழக - பாண்டிச்சேரி மண்டலம் சார்பில் "குருத்து வத்தை கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் யூபிலி ஆண்டுக்கான சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது.
தமிழக- பாண்டிச்சேரி மண்டல தலைவர் அம்பு ரோஸ் வரவேற்புரை வழங்கி னார். இறை அ ழைத்தல் பணிக்குழு மாநில செயலாளர் கிரிஸ்பின் போனிபாஸ் பேரவையை அறிமுகம் செய்து பேசினார். மண்டல செயலாளர் சகாயராஜ் பேரவையின் அறிக்கையினை வாசித்தார்.குருக்களின் அறிமுகத்தி ற்கு பிறகு கூட்டத்தின் மையக்க ருத்தின், மூல உரையை தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் வழங்கினார்.
யூபிலி ஆண்டில் மறை மாவட்ட குருக்களின் ஆன்மீக நலன் பற்றி திருத்தல அதிபர் இருத யராஜ், உடல்நல, மனநல அக்கறை குறித்து பிரான்சிஸ் சேவியர் நெல்சன், செயற்கை நுண்ணறிவு திறன் பற்றி ஜாக்சன் லூயிஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக தமிழக - பா ண்டிச்சேரி மண்டலங்களில் குருத்துவத்தின், வெள்ளி விழாவை கொண்டாடும் அருட்தந்தையர்களுக்கான சிறப்பு திருப்பலியும், வாழ்த்தி பரிசளிப்பு விழா வும் நடைபெற்றது. ஜார்ஜ் சந்தான ராஜ் தலைமையில் சி கில்ப்பர் ஜோ, வெள்ளிவிழா நாயகர்கள் மற்றும் அனைத்து அருட்த ந்தையர்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவே ற்றினர். பின்னர் அதன் நடைபெற்ற விழாவில் செங்கை மறை மாவட்டம் பாக்கிய ரெஜிஸ் அனை வரையும் வாழ்த்தி பேசினார். பின்னர் வெள்ளி விழா அருட்தந்தையர்கள் சார்பில் ஏற்புரை நிகழ்த்த ப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளி விழா கண்ட அருட்தந்தையர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மண்டல துணைத்தலைவர் ஜோசப் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
யூபிலி ஆண்டில் குருக்களுக்கான சிறப்பு நிகழ்வாக தமிழக - பாண்டிச்சேரி மறையா வட்டங்கள் சார்பில் 250 க்கும் மேற்பட்ட அருட்த ந்தையர்கள கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.