திருவிவிலியத்தை பற்றிய பத்திரிக்கையாளரின் பார்வை ! | Veritas Tamil
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி அறைகளில் பணியாற்றிய பிறகு நான் கற்றுக் கொண்ட ஒரு நிலையான உண்மை இதுதான்: எந்தக் கதையும் அனைத்தையும் முழுமையாகச் சொல்லாது. ஒரே சம்பவத்தைப் பற்றி பத்து சாட்சிகளிடம் பேட்டி எடுத்தால், பத்து விதமான விளக்கங்களைப் பெறலாம்.
ஒருவர் கார் எந்த நிறத்தில் இருந்தது என்று நினைவில் வைத்திருப்பார். மற்றொருவர் அந்த நேரத்தில் எழுந்த கத்தலை நினைவில் வைத்திருப்பார். மூன்றாவது ஒருவர் சந்தேகநபர் இடப்பக்கம் ஓடினார் என்று கூறுவார்; இன்னொருவர் அவர் வலப்பக்கம் ஓடினார் என்று உறுதியாகச் சொல்வார். சில சமயங்களில், ஒருவர் கூறும் விபரம் மிகவும் நம்பிக்கையற்ற தன்மையாய் இருக்கும்; அவர் உண்மையில் அதே சம்பவத்தில் இருந்தாரா என்றே சந்தேகம் வரும்.
ஒரு செய்தியாளராக, நீங்கள் கேட்கிறீர்கள், சரிபார்க்கிறீர்கள், தேவையற்றதை நீக்குகிறீர்கள், உண்மையை உறுதிப்படுத்துகிறீர்கள், இறுதியில் தேர்ந்தெடுக்கிறீர்கள். இந்தத் தேர்வு ஏமாற்றம் அல்ல; அது சிந்தித்துத் தொகுப்பதே.
மத்தேயு நற்செய்தி, யூதாஸ் தன் செயலில் மனவேதனை கொண்டு முப்பது வெள்ளிக்காசுகளைத் திருப்பிக் கொடுத்து, “தன்னைத் தூக்கில் போட்டுக் கொண்டான்” என்று கூறுகிறது.
ஆனால் அனுபவமுள்ள செய்தியாளராக இருக்கும் நான் இதை பார்வை வேறுபாடு என்று பார்க்கிறேன்.நான் அந்தச் செய்தியைப் பதிவு செய்திருந்தால், ஒருவரின் தகவல்: “அவன் தன்னைத் தூக்கில் போட்டுக் கொண்டான்” என்பதாக இருக்கும். மற்றொருவர்: “அவரது உடல் பின்னர் அந்த வயலில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று சொல்லியிருப்பார். என் வேலை பதறுவது அல்ல; உண்மையில் என்ன நடந்தது, எந்தக் கோணம் இந்தக் கதைக்கு பொருத்தம் என்பதைக் கண்டறிவதே.
செய்தித்துறையில் இது எப்போதும் நடக்கிறது.
ஒரு செய்தித்தாள் உணர்ச்சியை முன்னிலைப்படுத்தும்.
மற்றொன்று சட்ட விளைவுகளை.மூன்றாவது ஒன்று அரசியல் தாக்கத்தை.அவர்கள் யாராவது பொய் சொல்கிறார்களா? இல்லை.
அவர்களின் கதைகள் ஒரே மாதிரியா? அதுவும் இல்லை.
உண்மையில் முழுமையான ஒரே மாதிரியான விளக்கம் இருந்தால் அது சில சமயங்களில் சந்தேகத்தை அதிகப்படுத்தும்.ஒரு பத்திரிகையாளர் ஒரே ஒரு சாட்சியைக் கொண்டு செய்தி எழுதமாட்டார்.அவர் பல தகவல்களை ஒப்பிட்டு பார்க்கிறார்.நிபுணர்களிடம் ஆலோசிக்கிறார்.
சூழலை ஆய்வு செய்கிறார்.
அப்படியிருக்க, திருவெழுத்துகளை ஏன் அதைவிடக் குறைவான கவனத்துடன் அணுக வேண்டும்?சில பகுதிகள் சிக்கலானவை.
சிலவற்றை புரிந்துகொள்ள வரலாறு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் அறிவு தேவை.ஆனால் அந்த வேறுபாடுகளும் பதற்றங்களும் கதையை உடைக்கும் விஷயங்கள் அல்ல; அவை அதன் ஒரு பகுதிதான்.
முழுமையான விவரம் அல்ல — மைய உண்மை
திருவிவிலியம்
வானத்திலிருந்து நேரடியாக எழுதப்பட்ட ஒலிப்பதிவு அல்ல.அது சாட்சிகளின் நூலகம் — கவிதை, சட்டம், தீர்க்கதரிசனம், வரலாறு, துக்கம், குடும்ப மரபுகள், கதைகள்.இவை அனைத்தும் மனிதர்களின் கைகளால் எழுதப்பட்டவை; ஆனால் தேவனின் ஆவியால் ஊக்கமளிக்கப்பட்டவை.
பல ஆண்டுகள் செய்தித்துறையில் இருந்தபின் நான் கற்றுக்கொண்டது: உண்மை பல அடுக்குகளைக் கொண்டது.
நினைவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
கதைகள் நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை.
ஒரு கோணத்தில் இருந்து சொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.யூதாஸ் பற்றிய கதையோ, படைப்புக் கதைகளோ, தாவீது செய்த கணக்கெடுப்போ, நாசரேத்தில் அமைதியாக இருந்த ஆண்டுகளோ — இவற்றைப் படிக்கும் போது நான் பயப்படுவதில்லை.
அதற்கு பதிலாக, நான் மேலும் கவனமாக வாசிக்க அழைக்கப்படுகிறேன்.அதாவது, மிகவும் கவனமாக எழுதப்பட்ட செய்திகளும் கூட முழு கதையின் ஒரு பகுதியை மட்டுமே பதிவு செய்ய முடியும்.எனவே இது முழுமையான விவரங்களைப் பற்றியது அல்ல;மையமான உண்மையைப் பற்றியது.சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது — அனைத்தையும் பட்டியலிடுவது அல்ல, ஆனால் அந்த உண்மை நம்மைத் தொட அனுமதிப்பதே.
இறுதியாக ,திருவிவிலியம் வாசிப்பதற்கு மட்டும் அல்ல; அதை ஆராய்ந்து படிப்பதற்காகவும் உள்ளது.