‘இயேசுவைப் பின்தொடர்ந்தால், தனக்கும் பேரும் புகழும் புகழ் கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடு, இயேசுவை நற்செய்தியில் கண்ட இருவரும் எண்ணியிருக்கலாம். பெயர், புகழ். செல்வாக்கு என்று சீடத்துவ வாழ்வின் ஒரு பக்கத்தையே அவர்கள் கண்டார்கள்.
இயேசு தொழுநோயாளியைத் "தொட்டார்" என்பதாகும். தொழுநோயாளிகள் அசுத்தமாக இருப்பதாலும், அவர்களைத் தொட்டால் நோய் பரவும் என்பதாலும், தொடுதல் தடைசெய்யப்பட்டதொன்றாக யூதர்கள் மத்தியில் சட்டம் இருந்தது (லேவி 13:45-46).
தாவீதின் வழிமரபில் அவன் தோன்றியிருந்தாலும் போலித்தன்மையால் நாட்டையும் நற்பெயரையும் இழந்தான் என்பதை நினவில் கொண்டு, சீடத்துவத்தில் உண்மைக்கும் தாழ்ச்சிக்கும் உரிய வாழ்வுக்கு விழைவோம்.
ஆண்டவர் இயேசு புதியதொரு பொன்விதியைத் தருகின்றார். அதுதான், “பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகும்.
எசாயா போன்ற இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், திருமுழுக்கு யோவான் அவரது தாய் எலிசபெத்துவின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் என்று லூக்கா நற்செய்தியாளர் விவரிக்கிறார் (லூக் 1: 41).
நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். ஒவ்வொரு புனிதரும் உண்மைக்குச் சான்றுபகிர்ந்தவர்கள். அவர்களின் உறவில் வாழ்வோர் பொய்மைக்கு இடம் தரலாகாது.
பதுவை நகர அந்தோனியார் ) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்……. ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்” (மத் 12:31-32)