சென்னை மயிலை உயர்மறைமாவட்டம் 2025 யூபிலி ஆண்டின் தவக்கால திருயாத்திரை..!

சென்னை மயிலை உயர்மறைமாவட்டம் 2025 யூபிலி ஆண்டின் தவக்கால திருயாத்திரை மேதகு பேராயர். ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் தலைமையில் 06.04.2025 அன்று இலயோலா கல்லூரியில் தவக்கால திருயாத்திரை நடைபெற்றது .இதில் சென்னை மயிலை மறைமாவட்டத்தில் உள்ள அணைத்து பங்குகளிலிருந்து அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் , பொதுநிலையினர் அனைவரும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்நிகழ்வில் சிறப்பான பக்தி முயற்சியாக கலந்துகொண்டனர்.
வெயில் என்றும் பாராமல் இந்த திருநிகழ்வில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வின் தொடக்கமாக இலயோலா கல்லூரி கிறிஸ்து அரசர் ஆலயத்திலிருந்து இலயோலா கல்லூரி மைதானம் நோக்கி யூபிலி ஆண்டின் திருச்சிலுவை பவனி நடைபெற்றது இதில் அணைத்து இறைமக்களும் பக்தியாக கலந்துகொண்டனர்.
இப்புனித நிகழ்வில் பல குருக்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார்கள். இதில் இறைமக்கள் மட்டும் அல்லது அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஒப்புரவு அருட்சத்தனத்தில் கலந்துகொண்டனர். எனவே இறைமக்கள் இப்புனித நிகழ்வில் முழுமையாக பங்கெடுக்க வாய்ப்பாக அமைந்தது..
அதனை தொடர்ந்து மேதகு ஆயர் S. சிங்கராயர் அவர்கள் தலைமையில் திருச்சிலுவை வழிப்பாடு மற்றும் துதி ஆராதனையை நடத்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட CRI அருட்சகோதரிகள் துதி வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
மாலை 5.30 மணிக்கு மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் அணைத்து குருக்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நடத்தினார்கள்..
பேராயர் அவர்கள் மறையுரையிலே மூன்று முக்கிய இலக்கிற்காக இந்த திருயாத்திரை திருநிகழ்வினை கொண்டாடுகின்றோம் என்று குறிப்பிட்டார்..
அந்த இலக்குக்கள் என்ன..?
1.நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துதல்.
2.உறுதிப்படுத்திய விசுவாசத்தை புதுப்பித்து வாழ்க்கையின் மூலம் வாழவும்.
3.வாழுகின்ற வாழ்க்கையை நற்செய்தியின் வாழ்க்கையாக கிறிஸ்துவின் சீடர்களாக அதை பிறருக்கு அறிவிக்கவும் அதன்படி வாழவும் அழைப்பு விடுத்தார்.
திருப்பலி முடிந்த பின் இயேசுவின் திருப்பெயர்- திரு முகம் என்ற ஒளியும் ஒலி சிலுவைப் பாதை காட்சி வடிவில் திரியிடப்பட்டது. நம் வாழ்வில் தினமும் நடப்பதை குறித்து ஒரு அர்த்தமுள்ள சிலுவைபாதையாக இந்த ஒளியும் ஒலி அமைந்தது. அதன் பின் இறுதியாக இந்த தவக்கால திருப்பயணத்தின் ' இயேசு ' என்ற கருப்பாடலை பின்னணி பாடகர் திரு. விஜய் யேசுதாஸ் பாடினார்.
அதனை தொடர்ந்து இறைமக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டு, அனைவரும் இல்லம் திரும்ப பேருந்து வசதிகளும் செய்து தரப்பட்டது...
Daily Program
