புனித லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நம்மால் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக நமது சொத்து, செல்வங்களை ஏழைகளோடு பகிர முன்வர இயலுமா? அதற்கான மனம் நம்மில் உள்ளதா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவுக்கு நல்லதொரு பதிலாக, “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றாள் அந்த தாய்.
இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது என்று அவளது மன்றாட்டை ஏற்றார்.
நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், நம்பாமலும் போனதால், அவர் அவர்களிடம் தொடர்ந்து வல்ல செயல்களை அவர் செய்யவில்லை. ஆம். இயேசுவை நாம் புறக்கணித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்கின்றபொழுது நாம்தான் பெரிய இழப்பை அடைகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்
கடவுள் குயவன் என்றும், நாம் களிமண் என்றும், நாம் கடவுளின் கைவேலை என்றும் சிந்திக்கையில் பெருமைபட வேண்டும். ஆகவே, குயவனாக தம்மை வெளிப்படுத்தும் கடவுள் நம்மை அவரது விருப்பப்படி வடிவமைக்கவும் உருவாக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்ட ஒருவரிடம். (மத் 19:21) “உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்று இயேசு கூறியதில், அவன் உடைமைகளை விற்று விண்ணரசு எனும் புதையலையோ முத்தையோ வாங்க விரும்பவில்லை. அவன் உலகைப் பற்றிக்கொண்டு வாழ்வதே பெரிதென கொண்டான்.
‘இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.’ (1 யோவான் 5:1) என்று யோவான் கூறியதை மனதில் கொள்வோம், நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். ஆகவே, இயேசுவே மெசியா என்று உலகெங்கும் அறிக்கையிட கடமைப்பட்டவர்கள்.
அறுவடை என்பது உலக முடிவைக் குறிக்கிறதாக பொருள் கொள்ளலாம்.
அறுவடையின் இறுதியில் நல்லவை களஞ்சியத்திலும், களைகள் தீயிலிட்டு சுட்டெரிக்கப்படுவதும் நல்லவர் விண்ணகம் செல்வதையும், தீயவர்கள் நரகம் செல்வதையும் குறித்துக்காட்டுகிறார் ஆண்டவர்.
விதைக்கச் செல்பவருக்கு விதை இன்றியமையாத ஒன்று. விதையின்றி எதை விதைப்பது? நமக்கு விதை என்பது இறைவனின் வார்த்தை. இறைவனின் வார்த்தை நம் கையில் உள்ளது. மேலும், அது இலவசமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக மகதலா மரியா தாம் பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருந்தார். ஆண்டவர் இயேசு, இவரைப் பற்றியிருந்த ஏழு பேய்களை ஓட்டியதும், அதை அப்படியே மறந்துவிட்டு அவர் வழியே சென்றுவிடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவோடு இறுதிவரை நின்றார்.
எங்கே இயேசு மக்களை எல்லாம் தம் ஈர்த்துக்கொண்டு பெரிய ஆளாகிவிடுவாரோ என்ற பயத்தில் அவரைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததை மத்தேயு சுட்டிக்காட்டுகிறார். ஆம், நல்லது செய்யும் பொது நமக்கு எதிராக நாலு குள்ளநரிகள் குரல்கொடுக்கத்தான் செய்யும். ஆனால், 'பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதுபோல, கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.