இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மே 8, வியாழன் காலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 133 கர்தினால்கள் அனைவரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்றனர்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை யாரும் பெறாததால் புதிய திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை கரும்புகை வழியாக மக்களுக்குத் தெரிவித்தனர்.
உரோம் உள்ளூர் நேரம் காலை 11.51 மணியளவில் இந்திய இலங்கை நேரம் மாலை 3.21 மணியளவில் கரும்புகையானது வெளியேற்றப்பட்டு புதிய திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்தது.
ஏறக்குறைய 12,000 மக்கள் வத்திக்கான் வளாகத்தில் மிகுந்த் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். நீண்ட நேரமாக கரும்புகையானது புகைபோக்கி வழியாக வெளியேறுவதைக் கண்டு சிலர் வத்திக்கான் வளாகத்தை விட்டு வெளியேறினர், மற்றும் சிலர் வளாகத்திலேயே தங்கியிருந்து அடுத்த முறை புகை வரும் நேரம் பார்த்து காத்திருந்தனர்.
Daily Program
