சென்னை-மயிலாப்பூரில் பான் செகோர்ஸ் சபையின் புதிய தலைமை கட்டிடம் திறப்பு.

பிப்ரவரி 6, 2025 அன்று காலை 10 மணிக்கு விசுவாசம், சேவை மற்றும் மரபு ஆகியவற்றின் மாபெரும் கொண்டாட்டமாக, பான் செகோர்ஸ் சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சென்னை மயிலாப்பூரில் மாதா சர்ச் சாலையில் உள்ள பான் செகோர்ஸ் கான்வென்ட்டில் தங்கள் புதிய தலைமை கட்டிடம் திறந்து வைத்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அருட்பணியாளர்கள் ,பான் செகோர்ஸ் அருட்சகோதரிகள் மற்றும் சபையின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மெட்ராஸ்-மயிலாப்பூர் பேராயர் மற்றும் டிஎன்பிசி/டிஎன்எல்பிசியின் தலைவரான டாக்டர் ஜார்ஜ் அந்தோனிசாமி டி.டி., திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த புனிதமான நிகழ்வில் கட்டிடத்தின் திறப்பு விழாவுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து புனித நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது.

புதிதாகக் கட்டப்பட்ட இந்த தலைமை கட்டிடம் ஒரு நிர்வாக மையம் மட்டுமல்ல, ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வது, இளைஞர்களுக்கு கல்வி கற்பது மற்றும் நோயுற்றோர் மற்றும் தேவைப்படுபவர்களைப் பராமரிப்பது என்ற அதன் பணிக்கான சபையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னமாக உள்ளது. போன் செகோர்ஸ் சபை முதலில் சென்னை-மயிலாப்பூர் மறைமாவட்டத்தில் வேரூன்றியது.

இந்த நாளில் சபையின் சுப்பீரியர் ஜெனரல் மற்றும் டிஎன்சிஆர்ஐயின் தலைவரான டாக்டர் மரியா பிலோமி எஃப்.பி.எஸ் அவர்களால் மெயின் கேட் மற்றும் ஆபீஸ் கம் ரெசிடென்ஸ் திறந்து வைக்கப்பட்டது.வரலாறு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பான் செகோர்ஸ் சகோதரிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமும் இதில் அடங்கும். மேலும், நூலகத்தை சென்னையின் ஜேசுட் மாகாண மற்றும் TNCRI நிர்வாக உறுப்பினர் அருட்தந்தை. ஜெபமாலை ராஜா எஸ்.ஜே. அவரகள் திறந்துவைத்தார்.

காப்பகங்கள், மாநாட்டு மண்டபம் மற்றும் ஆடிட்டோரியம் போன்ற முக்கிய வசதிகளும் அருட்தந்தையர் உட்பட சிறப்பு விருந்தினர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அருட்பணி வின்சென்ட்  சின்னதுரை (Parish Priest, Santhome Cathedral), அருட்பணி சி.ஜோ அருண் எஸ்.ஜே. (தலைவர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு), மற்றும் டாக்டர் சேவியர் அருள் ராஜ் (மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்). செயின்ட் ஜோசப்பின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் அன்னை எம். ஆரோக்கியம் எஃப்.எஸ்.ஜே அவர்களால் ஆடிட்டோரியம் முறையாக திறக்கப்பட்டது.