‘திருத்தூதர் வழிவந்த திருஅவையை நம்புகிறேன்’| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் இரண்டாம் வாரம் –வெள்ளி
எபிரேயர் 8: 6b-13
மாற்கு 3: 13-19
‘திருத்தூதர் வழிவந்த திருஅவையை நம்புகிறேன்’
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது, பழைய, புதிய உடன்படிக்கைகள் மீது நமது கவனத்தை ஈர்க்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவதாகக் கடவுள் எரேமியாவில் (31: 31-34) கொடுத்த வாக்குறுதிகளை ஆசிரியர் நினைவு கூர்ந்து வெளிப்படுத்துகிறார். கடவுள் புதுப்பிக்க விரும்பிய புதிய உடன்படிக்கையானது, இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் கடவுளைப் பற்றிய "அன்பின் புரிதல்" அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக ஆசிரியர் மேலும் விவரிக்கிறார்.
விடுதைப் பயணத்தின்போது தோற்றுவிக்கப்பட்ட (பழைய) உடன்படிக்கையானது பலகையில் (விப 32:18-19) கொடுக்கப்பட்டது. ஆனால், கடவுள் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையை மக்களின் இதயத்தில் எழுதுகிறார். புதிய உடன்படிக்கையின் சாரமாக உள்ளது, ‘நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’ என்பதாகும்.
நிறைவாக, “புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை கடவுள் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே’ என்ற படிப்பினையை இக்கடிதத்தில் ஆசிரியர் முன்வைக்கிறார்.
நற்செய்தி.
1. நற்செய்தியில் இயேசு தமது பன்னிரு திருத்தூதர்களை அழைக்கிறார். மறைநூலில் பன்னிரண்டு என்பது எனும் எண் முக்கியம் வாய்ந்தது. ஏனெனில் அது இஸ்ரவேல் (யாக்கோப்பு) வழிவந்த குலத்தவரின் ஆகும். இந்த எண் முழுமையைக் குறிக்கும் எண்ணாகவும் கருதப்படுகிறது. இந்தப் பன்னிருவரும் ‘அப்போஸ்தலர்கள்’ ஆகின்றனர் ( கிரேக்க மொழியில் ‘அப்போஸ்டோலோய்’ என்றால் "அனுப்பப்பட்டவர்கள்" என்று பொருள்படும். இன்றைய மொழிப்பெயர்ப்பில் ‘திருத்தைதர்கள’ என்று அழைக்கிறோம். இவ்வாறு, இயேசு கிறிஸ்து இந்த திருத்துதூதர்களைப் பயிற்றுவித்து, பின்னர் தம் பணியைத் தொடர அனுப்பப் போகிறார். அவர்களுடன் தனிப்பட்ட, நெருக்கமான, அன்பான மற்றும் உறுதியான உறவைக் கொண்டிருப்பதன் மூலம் அவர் அவர்களுக்கு நேரடியான பயிற்சி அளிக்கவுள்ளார். அவர்கள் வெளியே சென்று மற்றவர்களையும் கடவுளோடு ஒத்த, நெருங்கிய உறவுக்கு அழைக்கும்படி இயேசு அவர்களைத் தயார்படுத்தவுள்ளார். அவர்களது தலையாயப் பணிகள் இரண்டு. அவை:
1 அரோடு நற்செய்தி பறைசாற்றுவது.
2 தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்க அனுப்பப்படுதல் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
நாம் அனைவருமே இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள். அவரால் சிறு வயது முதல் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். மறைக்கல்வி வகுப்புகளும் நமது குடும்பமும் நம்மில் கிறிஸ்து உருவாகும் வரை நம்மைப் பயிற்றுவிக்கப் போராடுகிறன என்றால் மிகையாகாது. இங்கே நம்பிக்கை வளர்ச்சியும் கிறிஸ்தவ வாழ்வில் முதிர்ச்சியையும் நாம் பெறுகிறோம்.
நற்செய்தியின் தொடக்கத்தில், 'மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார், அவர்களும் அவரிடம் வந்தனர் ' என்று மாற்கு குறிப்பிடுகிறார். இயேசு இவர்களைப் பற்றிய பின்னணியை யாரிடமும் விசாரித்து அறிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அவர் விருப்பினார், அழைத்தார் தேர்ந்து கொண்டு அவர்களுக்குத் ‘திருத்தூதர்’ என்ற பொதுப் பெயரைச் சூட்டுகிறார்.
இதற்கு முன்பாக அவர்களை மலைக்கு அழைக்கிறார். தரையில் வைத்தும் பார்த்தால் சிலரது முகங்கள் மறைவாக இருக்கும் என்பதாலோ என்னவோ அவர் மலைக்கு அழைத்துப் அவர்களைத் தேர்வுச் செய்கிறார். ஆம், இயேசு திருத்தூதர்களை ஒரே முழுமையான பார்வையால் பார்க்கின்றார். சற்று மேலிருந்துப் பார்க்கும்போது பன்னரிருவரும் அவரது கண்ணில் படுகிறார்கள்.
மேலும், அன்றே சிலரின் பெயர்களையும் அவர் மாற்றுகிறார். தலைவன் எவ்வழியோ சீடர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்றாற்போல் இவர்களும் இயேசு கொடுத்த அதிகாரத்தின் பேரில் இறை போதனையைச் செய்யலாயினர். பன்னிரண்டு திருத்தூதர்களும் முதலில் இயேசுவால் அழைக்கப்பட்டு பின்னர் அதிகாரத்துடன் போதிக்க அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பேய்களை விரட்டும் நோக்கத்திற்காக இருந்தது. என்று அறிகிறோம்.
பேய்கள் விண்ணிலிருந்து விரட்டப்பட்ட (வீழ்ந்த) வானதூதர்கள். ஆனால் அவர்கள் வீழ்ச்சியடைந்த நிலையிலும் கூட, அவை தங்களிடம் உள்ள இயற்கையான சக்திகளை இழக்கவில்லை. நம்மை ஏமாற்றி கிறிஸ்துவை விட்டு நம்மை பிரிக்க அவை நம்முடன் தொடர்பு போராடுகின்றன. ஆகவேதான் திருப்பயணிகளான நமது வாழ்வு ஒரு போராட்ட வாழ்வு. புனித பவுல் அவரது நம்பிக்கை வாழ்வையொட்டிப் பகிரும்போது, ‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 திமொ 4:7) என்று சாட்சியம் பகர்வார். மற்றொன்று, இயேசுவின் திருத்தூதர்கள் அன்னை மரியாவை தாயென ஏற்று அவரோடு தூய ஆவியைப் பெற்றவர்கள். இயேசு விட்டுச் சென்ற தாயை அவர்கள் கைவிடவில்லை.
ஆகவே, இயேசுவின் திருத்தூதர்களாக நாம் புதிய உடன்படிக்கையின் மக்கள் என்பதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, நீர் அழைத்தத் திருத்தூதர்கள் உலக நலன்களைத் துறந்து உம்மில் பற்றுறுதி கண்டதுபோல், நானும் உம்மில் பற்றுறுதிக் கொள்ள அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452