மத்தேயு இயேசுவைப் பின்செல்ல கடவுளின் அருளே காரணமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் வார்த்தை அவரது ஆன்மாவில் "சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தெளிவை" உருவாக்கி இருக்கக்கூடும்.
புதிய அருளாளர் Giovanni Merlini மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தவர்.
உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
‘அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்கிறேன்’ என்று நாளும் பொழுதும் முழங்குபவர் ஒரு பொய்யர் என்று யோவான் குறிப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே
ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்ற செய்தியை மலாக்கி வழங்குகின்றார்.
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது