"வலுக்குறைந்தவர்களைக் காப்பதும், அமைதியைப் பாதுகாப்பதும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்" என்றும் மொழிந்தார்.
"கடந்த 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மட்டும், கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன " என்று சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ
நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் (Dicastery for Evangelisation) இணை-தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே விடுத்துள்ள செய்தியில், எதிர்கால சந்ததியினருக்கான ஆயர்களின் பொறுப்பை நினைவுபடுத்தினார்.