திருவிவிலியத்தைப் பற்றி அறிவித்த சேலேசிய அருட்தந்தையை கௌரவித்த CBCI ! | Veritas Tamil
பிப்ரவரி 9, 2026 அன்று, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (CBCI), பைபிள் BibleOn மொபைல் செயலி மற்றும் இணையதளத்தின் மூலம் திருவிவிலியத்தை வெளியிட்டு பரப்பிய சிறப்பான பணிக்காக சேலேசியர் திரு. ஜோஸ்குட்டி தோமஸ் SDB அவர்களை கௌரவித்தது. அவர் வடகிழக்கு இந்தியாவின் சேலேசியர் துறையின் டிமாபூர் மாகாணத்தைச் சேர்ந்தவர்.
இந்த டிஜிட்டல் தளம் 44 மொழிகளில் திருவிவிலியத்தை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. அதில் வடகிழக்கு இந்தியாவில் பேசப்படும் 18 மொழிகளும் அடங்கும். மேலும், பல பிராந்திய மற்றும் பழங்குடியினர் மொழிகளில் ஒலிப்பதிவுகளும் வழங்கப்பட்டுள்ளதால், திருவிவிலியத்தை அதிகமானோர் அணுக முடிகிறது.BibleOn செயலியின் இணை நிறுவனர் திரு. தாம்சன் பிலிப் அவர்களுடன் சேர்ந்து, பல மொழி சமூகங்களுக்கு கடவுளின் வார்த்தையை கொண்டு சேர்க்கும் பணியில் திரு. ஜோஸ்குட்டி முக்கிய பங்கு வகித்தார்.
ரேடியோ வேரித்தாஸ் ரிதாஸ் ஏசியாவிடம் (RVA) பேசிய அவர், இந்த கௌரவத்திற்காக நன்றியைத் தெரிவித்தார்:
“இந்த விருதைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. நான் செய்த பணியில் தேவன் என்னை ஆசீர்வதித்ததற்கும் வழிநடத்தியதற்கும் அவருக்கு நன்றி. திரு. தாம்சன் மற்றும் எங்கள் குழுவுடன் சேர்ந்து செய்த இந்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இறைவனுடைய வார்த்தையை பறைசாற்றிய எங்களது முயற்சியை திருஅவை பாராட்டியது எனக்கு பேரானந்தம் அளிக்கிறது,” என்றார்.
இறுதியாக ,இந்த விருது வழங்கும் விழா பெங்களூருவிலுள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து வந்த கத்தோலிக்க ஆயர்கள் இதில் கலந்து கொண்டனர். திருஅவைக்கும் சமூகத்திற்கும் சேவை செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இது அமைந்தது. அதே நிகழ்ச்சியில் மேகாலயாவின் கத்தோலிக்க முதலமைச்சரும் திருஅவை , சமூகம் மற்றும் தேசத்திற்கான சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்.