மேலும் "வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும்" என்று கூறியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டு"ம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வலிமை படைத்த நிறுவனங்கள், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழுவின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.
தவக்காலத்தின் மூன்றாவது வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சிக்கு, மாஹிம் மேற்கில் உள்ள கனோசா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஷீலா டிசோசா தலைமை தாங்கினார்.
“மறைப்பணி அழைப்பு அனைவருக்கும் உள்ளது,” என்று அவர் கூறி, சமூக ஊடகங்கள், காணொளிகள் மற்றும் ஆன்லைன் தொடர்பாடல் தளங்கள் போன்ற டிஜிட்டல் மேடைகளை பயன்படுத்தி நற்செய்தி செய்தியைப் பரப்ப நம்பிக்கையாளர்களை அழைத்தார்.
"வலுக்குறைந்தவர்களைக் காப்பதும், அமைதியைப் பாதுகாப்பதும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்" என்றும் மொழிந்தார்.
"கடந்த 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மட்டும், கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன " என்று சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ