தனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில் பல்வேறு கேள்விகளை கேட்டு அல்லது சந்தேகங்களை எழுப்பி குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று. அதனால் குழப்பவாதிகள் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
யோசேப்புக்கும், மரியாவுக்கும், பவுல் அடியார், மற்றும் அனைத்து இறைவாக்கினர்களுக்கும் அவரே வழிகாட்டினார். நமக்கும் அவ்வாறே செய்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.
நம்மையும் நமக்குள்ளதையும் பகிர வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. நம்மில் உறவுகொண்டு வாழும் எவரும் அழிவுறக்கூடாது என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவம் அழிவுக்கானது அல்ல, மாறாக வாழ்வுக்கானது.
நாளும் அவரோடு உறவில் வாழ முதலில் முற்படுவோம், அதுவே ஓர் உன்னத அற்புதமாக மாறும். கடவுளில் நம் முதன்மை கவனம் இல்லை என்றால், மற்ற அனைத்தும் விரைவில் நம் கவனத்தை ஈர்க்கும். நாம் படுகுழுயில் விழுவோம்.
ஆண்டவரின் ‘அஞ்சாதீர்' எனும் கூக்குரல் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் கிறிஸ்தவம் இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க முடியாது.
நம்மில் உயிரோட்டமான வாழ்வை அளித்திருப்பவர் தூய ஆவியார். அவர் நம்மில் இருந்துகொண்டு செயலாற்றும்போது, நாம் மாறுபட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை ஆய்ந்துணர வேண்டும். நாம் உலகம் சார்ந்த வாழ்க்கைக்கான கோழைகள் அல்ல.
கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருளுக்கும் ஒளிக்கும் பணிவிடை செய்ய இயலாது. கடவுளுடனான நமது உறவை தைரியமாக அறிவிக்கவும் சாட்சியம் பகரவும் துணிவு தேவை. இந்த வரத்திற்காக தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
நம்மில் தூய ஆவியாரின் ஆற்றல் உண்டு என்பதை முதலில் ஏற்க வேண்டும். நமது தேடல் இயேசுவின் திருவுடலாக விளங்கும் அவரது ஒரே திருஅவையில் முழுமை பெறுகிறது என்பதை நம்ப வேண்டும். அதைவிடுத்து இரும்புக் கடையில் வைர நகையைத் தெடுவதுபோல அங்கும் இங்கும் தாவுவதால் பயனில்லை. பாதை மாறியிருந்தால் இரு சீடர்களைப் போல் உண்மைக்குத் திரும்புவோம். நமது மந்த புத்தியைப் போக்கி, உண்மை சீடத்துவத்திற்கும் சாட்சிய வாழ்வுக்கும் உயிர் கொடுப்போம்.
உயிர்த்த ஆண்டவர் இன்றும் பலருக்குத் தோட்டக்காரராகவே இருக்கிறார். அவரில் நாம் தெளிவுப் பெற்று பிறருக்கு அவரை அடையாளம் காட்டும்போது, நாமும் மகதலா மரியாவாக மாற இயலும். நம்மையும் இயேசு பெரிட்டு அழைப்பார்.
ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்பது வந்துபோகும் ஒரு கொண்டாட்டம் அல்ல. மாறாக, ஒவ்வொரு உயிர்ப்பு பெருவிழாவும் நம்மிலும் நமது மனிதநேய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்பு.
அருள்பணி. அன்புசெல்வம் வழங்கும் இந்த உயிர்ப்பு பெருவிழா சிந்தனையை கேட்டு மகிழுங்கள். மீட்பின் பாதையில் நாமும் ஆண்டவரோடு நடைபோட இந்த உயிர்ப்பின் ஞாயிறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
‘மனுமகனின் கல்வாரி மரணம் அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அவரது இறையாட்சி கனவுக்குப் புதைக்கப்பட்ட விதை’ என்பதில் நமது நம்பிக்கையை அதிகமாக்குவோம், துணிவும் வாழ்வும் பெறுவோம்.
நம்மில் தியாக உணர்வு பெருக்கெடுக்கும்போது சுயநலம் எனும் தீ தானாகவே அணையத் தொடங்கும். எனவே, நம்மில் உள்ள ‘யூதாசை’ கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவோம். மனிதநேயத்திற்கும் பிறர் அன்பிற்குமானவர்களாக பொதுநலம் பேணுவோம். கடவுள் நல்லவர் பக்கம் என்றும் இருப்பார்.
மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் போலன்றி இயேசுவின் சீடத்துவ வாழ்வு சிறப்புற துன்பத்தை ஏற்கவும் நேர்வழி நடக்கவும் முற்படுவோம். ‘அலகைக்கு இடம் கொடாதீர்கள்’ (எபே 4:27) எனும் புனித பவுல் அடிகளின் அறிவுரையை ஏற்போம்.