உம் சொற்படி எனக்கு நிகழட்டும்" என்று வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

27 சனவரி 2026
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – செவ்வாய்
2 சாமுவேல  6: 12b-15, 17-19
மாற்கு 3: 31-35


‘உம் சொற்படி எனக்கு நிகழட்டும்" என்று வாழ்வோம்!


முதல் வாசகம்.

 
இந்தப் பகுதியில் இஸ்ரயேலின் வரலாற்றில் ஒரு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணத்தை அறிய வருகிறோம். ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து எருசலேமுக்கு உடன்படிக்கைப் பேழையை - தம்முடைய மக்கள் மத்தியில்  கடவுளின் உடனிருப்பின் புனித அடையாளமான - தாவீது கொண்டு வருகிறார்.

ஓபேத்-ஏதோமின் வீட்டில் அந்தப் பேழை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது, அங்கு ஆணடவர் அந்த வீட்டை ஆசீர்வதித்தார். தாவீது இதைக் கேட்டதும், மகிழ்ச்சியுடன் அந்தப் பேழையை தாவீதின் நகரமான எருசலேமுகுக் கொண்டு வர முடிவு செய்கிறார்.

பேழை எருசலேமை நோக்கி எடுத்துச் செல்லப்படும்போது, தாவீது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் – ஆண்டவருக்கு முன்பாக "தன் முழு பலத்தோடும்" நடனமாடி, ஒரு எளிய லினன் ஆடையை மட்டும் அணிந்து, தனது மனத்தாழ்மையையும் வெளிப்படுத்தினார்.  மக்களுக்கு  உணவு அளிக்கிறார். தாவீது ஓர் எட்டா கனியாக அல்ல, ஒரு தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயல்படுகிறார். மக்கள் நடுவே கடவுளின் உடனிருப்பு ஒளிர அவர்கிளன் மையத்தில் பேழைழை வைக்கிறார். 


தொடர்ந்து ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி  தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார் என்று இப்பகுதி நமக்கு அறிவுறுத்துகிறது.


 நற்செய்தி.

இந்த சிறிய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் தாயாரும் சகோதரர்களும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்க ஒருவரை அனுப்புகிறார்கள். இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் இதை அவருக்கு அறிவிக்கிறார்கள்.

அப்போது  இயேசு ‘என் தாயாரும் என் சகோதரர்களும் யார்?’ என்ற கேவியை முன்வைக்கிறார். உடனே, தம்முடன் கூடியிருந்த தம் சீடர்களையும் மற்றவர்களையும் சுற்றிப் பார்த்து, “இதோ என் தாயாரும் என் சகோதரர்களும்!” என்று அவர் பதிலளிக்கிறார்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்று அவர் முடிக்கிறார்.


சிந்தனைக்கு.


இரண்டு வாசகங்களும் மிகவும் மாறுபட்ட சூழல்களிலிருந்து வந்தாலும்  அவை ஆழமான இறையியல் மற்றும் ஆன்மீக தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன.  

1. கடவுளின் உடனிருப்பு மற்றும் உண்மையான உறவு

முதல் வாசகத்தில், தாவீது மகிழ்ச்சியுடன் உடன்படிக்கைப் பேழையை    இஸ்ரயேலின் தலைநகரின் மையத்திற்குக் கொண்டு வருகிறார். கடவுள் தனது மக்களிடையே தங்குவதில்  அவரது முழு சமூகமும் மகிழ்ச்சியடைகிறது.

கடவுள் தனது மக்களுடன் வசிப்பதில் தாவீது அக்கறை கொள்கிறார்.  கடவுள் ஆலயத்தில் மட்டுமல்ல  சமூகத்திலும்  அவர் தங்கிட வேண்டும் என்று தாவீது முனைப்பு காட்டுகிறார். 
 
2. கடவுளுக்குக் கீழ்ப்படிதலால் .

நற்செய்தியில், இயேசு தனது  குடும்ப மக்கள்  தன்னைத் தேடும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடவுள் – மக்கள் இடையே உள்ள ஓர் உண்மையைக் கற்பிக்கிறார்: குடும்பம் என்பது இரத்தர உறவால் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல.   மாறாக கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஒன்றிக்கப்படும் மக்கள் சமூகம் என்பதை நினவூட்டுகறார்.  

இதன் வழி, இயேசு தன்னைச் சுற்றியுள்ள சீடர்களைத் தனது உண்மையான "சகோதர சகோதரிகள்" என்று சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறு   யாராக இருந்தாலும் அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவராக இருந்தால் மட்டுமே  அவர் இயேசுவின்  சகோதரராகவும் சகோதரியாகவும் மாறமுடியும். இது இந்த நிபந்தனைக்குரிய அன்புறவு. இவ்வாறு, உண்மையான தாய்மையும் உண்மையான சகோதரத்துவமும் இரத்தத்திலிருந்து மட்டுமல்ல, கடவுளின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிதலிலிருந்தும் பிறக்கின்றன.  


அன்னை  மரியா கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வந்ததால் (லூக் 1:38)   இயேசுவின் தாயாகின்றார் என்பதைவிட மேலான எடுத்துக்காட்டை நம்மால் தர இயலாது. 

இரு வாசகங்களையும் ஒன்றித்துப் பார்ப்பதில்:

தாவீது செய்தது போல் நாம் கடவுளின் உடனிருப்பை விரும்பி ஏற்க வேண்டும். பிறரும் கடவுளின் உடனிருப்பை அனுபவிக்க வழிவகைகள் செய்ய வேண்டும். இதற்கு நல்லதொரு எடுத்துகாட்டு  வாழும் பகுதிகளில் திருவிவிலிய அல்லது இறைவார்த்தைப்  பகிர்வாகும். 

•    இயேசுவுடன் நெருக்கமாக இருப்பது என்பது அவரைப் போன்று கடவுளின் திருவுளத்தை ஏற்பதும் அதை நிறைவேற்ற வாழ்வதோடு, சுற்றி இருப்போரை அன்பு செய்து வாழ்வதாகும்.  நிறைவாக,  ‘இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்ககளுடன் இருக்கிறேன்’ (மத் 28: 20) என்பார் இயேசு. ஆகையால், நற்கருணை வடியில் நம் வடிவில் வீற்றிருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்முடைய வாழ்வில் உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.  

 
 
இறைவேண்டல்.


இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்ககளுடன் இருக்கிறேன்’ என்றுரைத்த ஆண்டவரே, உமது உடனிருப்பில் நான் எந்நாளும் உறைந்திருக்க அருள்வீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452