பூவுலகு

  • உலக கொசு தினம் | August 20

    Aug 20, 2022
    1. கொசுக்கள் கொடிய விலங்கு - பல உயிரிழப்புக்கு காரணமானவை

    2. பெண்கள் மட்டுமே கடிக்கிறார்கள் - இனப்பெருக்கம் செய்யும் போது மட்டுமே: அவர்கள் இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கும்போது, ​​​​பெண் கொசுக்கள் புரதத்திற்காக இரத்தத்தை உண்ண வேண்டும். முட்டைகளை உற்பத்தி செய்ய முயற்சி செய்யாத ஆண் மற்றும் பெண் கொசுக்கள் பூவின் தேனில் வாழ்கின்றன.
  • உலக புகைப்பட தினம் | August 19

    Aug 19, 2022
    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று, உலக புகைப்பட தினம் (உலக புகைப்பட தினம் என்றும் அழைக்கப்படுகிறது) கலை, கைவினை, அறிவியல் மற்றும் புகைப்படத்தின் வரலாற்றைக் கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் தங்கள் உலகத்தை உள்ளடக்கிய ஒரு புகைப்படத்தைப் பகிரவும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
  • உலக யானைகள் தினம் | August 12 | Veritas Tamil

    Aug 12, 2022
    வரலாற்றுக்கு முந்தைய அழகு, இறையியல் சம்பந்தம் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, இந்த ஆகஸ்ட் 12 அன்று, உலக யானைகள் தினத்துடன் பூமியின் மிக அற்புதமான உயிரினங்களில் ஒன்றைக் கொண்டாடுகிறோம். கடந்த தசாப்தத்தில், யானைகளின் எண்ணிக்கை கணிசமாக 62% குறைந்துள்ளது மற்றும் அடுத்த தசாப்தத்தின் இறுதியில் அவை பெரும்பாலும் அழிந்துவிடும்.
  • சர்வதேச பீர் தினம் | August 05 | VeritasTamil

    Aug 05, 2022
    உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் பிரியமான பானத்திற்கான மனிதகுலத்தின் பொதுவான தாகத்தைக் கொண்டாடுவதுதான் சர்வதேச பீர் தினமாகும். முதல் தானியங்கள் தற்செயலாக புளிக்கவைக்கப்பட்டு, ஒரு குமிழி நறுமணப் பொருளை உற்பத்தி செய்ததில் இருந்து மனிதர்கள் பீர் மீது ஈர்க்கப்பட்டனர், யாரோ ஒருவர் சுவைக்கத் துணிந்தார், இறக்கவில்லை, மாறாக ஒரு அழகான சிறிய சலசலப்பை உணர்ந்தார், புன்னகைத்து, "வாவ்" என்று கூறினார்.
  • பாலைவனமாதல் வறட்சிக்கு எதிரான உலக நாள் | ஜுன் 17

    Jun 17, 2022
    பாலைவனமாதல் வறட்சிக்கு எதிரான உலக நாள்
    மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
  • உலக காற்று நாள் | ஜீன் 15

    Jun 15, 2022
    உலக காற்று நாள்


    உலகக் காற்று நாள் (World wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இந்நாள் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும்படி செய்கிறது.
  • உலக பெருங்கடல் நாள்| June 8

    Jun 08, 2022
    உலக பெருங்கடல் நாள்
    உலகப் பெருங்கடல்கள் நாள் (றுழசடன ழுஉநயளெ னுயல) ஆண்டுதோறும் சூன் 8 தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
  • உலக சுற்றுசூழல் நாள் | June 5

    Jun 05, 2022
    1974 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.
  • உலக மிதிவண்டி நாள் | June 3

    Jun 03, 2022
    2018 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது. காரணம், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி என்பதனை அங்கிகரிப்பதற்காகவே.
  • உலக பால் நாள்

    Jun 01, 2022
    2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  • காலத்திற்கும் கலாம் தந்த பரிசு!

    May 11, 2022
    இந்தியாவில் ஆண்டுதோறும் மே 11 ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடிவருகிறோம். 1998 ஆம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல்கலாம் தலைமையில், இந்தியாவில் உள்ள போக்ரானில் இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தி முதல் வெற்றி கண்டது.
  • சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் | May 6

    May 06, 2022
    மே 6 அன்று சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடலின் அமைப்பினை நாம் அன்புசெய்ய, ஏற்றுக்கொள்வதற்காக இந்த நாள்; கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடல் பருமன் எவ்வாறு இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான உணவுமுறையை மட்டும் நாம் பின்பற்றவேண்டும். அதற்காக உணவுக் குறைப்பில் ஈடுபடக்கூடாது. உடல் பருமன் என்பது உணவுப் பழக்கத்தால் மட்டும் வருவதல்ல, குறைந்த சுயமரியாதை, கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது. எனவே உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் உணவு டயட் முறையைப் பின்பற்றினால், நாம் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு அதிகமான உடல் பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற விழிப்புணர்வை இந்நாள் வலியுறுத்துகிறது.
  • சர்வதேச சூரியன் நாள் | May 3

    May 03, 2022
    மே 3 ஆம் தேதி சர்வதேச சூரியன் நாள் கொண்டாடப்படுகிறது. சூரிய சக்தியின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதன் மூலம், கிரகத்தின் ஆற்றல் சமநிலையை பாதிக்காது. எனவே, சூரிய சக்தி என்பது சுற்றுச்சூழல் நட்பு ஆதாரங்களில் ஒன்றாகும். சுற்றுச்சூழலை விசமாக்கும் எரிபொருளைப் பிரித்தெடுத்தல் மற்றும் எரிப்பதைத் தவிர்க்க இது அனுமதிக்கிறது.
  • உலக ஓமியோபதி தினம் | April 10

    Apr 10, 2022
    ஓமியோபதியைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவர். இந்நாள் மாற்று மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும், அதை மேற்கொள்வது மற்றும் அதன் தீர்வுவிதங்களை மேம்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச நாள் | April 4

    Apr 04, 2022
    ஐநா பொதுசபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று கொண்டாடப்பட்டது.
  • சர்வதேச போதைப்பொருள் சோதனை நாள் | march 31

    Mar 31, 2022
    மார்ச் 31, 2017 அன்று, போதைப்பொருள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, பாதுகாப்பான போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் சர்வதேச போதைப்பொருள் சோதனை தினத்தை நடத்தியது. போதைப்பொருள் சோதனை என்பது, பயனர்கள் தாங்கள் உட்கொள்ள விரும்பும் பொருட்களின் உள்ளடக்கம் மற்றும் தூய்மையைக் கண்டறிய அனுமதிப்பதன் மூலம் போதைப்பொருள் நுகர்வு பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். பாதுகாப்பானவைகளை தேர்வுசெய்யவும், அதிக ஆபத்தான பொருள்களை தவிர்ப்பதற்கும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இருபது நாடுகளில் போதைப்பொருள் சோதனைச் சேவைகள் உருவாக்கப்பட்டும், பல நாடுகளில் பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.
  • உலக வானிலை ஆராய்ச்சி தினம் | March 23

    Mar 23, 2022
    வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில தகவல்கள்தான். வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினம் (றுழசடன ஆநவநழசழடழபiஉயட னுயல); நமக்குச் சொல்வது.
  • நீரின்றி அமையாது உலகு

    Mar 22, 2022
    1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் நாள் உலக நீர்வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
  • உலக காடுகள் தினம் | March 21 | World Forest Day

    Mar 21, 2022
    1971 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.