பூவுலகு

  • உன்னோடு நான் இருப்பேன்

    Jul 16, 2020
    நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫
  • மரம் வளர்த்தாலும் கேடா?

    Jul 06, 2020
    உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் (greenhouse) வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகும். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.
  • காற்றின் விலையைக் கணக்கிட்ட முதியவர்

    Jun 27, 2020
    இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.
  • மறைந்த துளை!

    Jun 11, 2020
    பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்?
  • எங்களை தெரியுமா?

    Jun 06, 2020
    பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.
  • இறைவன் இயற்கை மனிதன் இணைக்கும் நதிகள்

    May 29, 2020
    கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.
  • ஒரு சுற்றுச்சூழல் படுகொலை- தவக்காலத்தில்?

    Feb 19, 2020
    பசுமையை நோக்கி தவக்காலத்தில் கார்டினல் போ, மியன்மார் கத்தோலிக்கர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதைப் பற்றி அறிய 40 நாட்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். தவக்காலத்தின் 40 நாட்களில் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை யாங்கோனின் கார்டினல் சார்லஸ் மயுங் போ எடுத்துரைத்துள்ளார்.
  • இயற்கையில் உறைவோம், இறையை மாட்சிப்படுத்துவோம்

    Aug 06, 2019
    கிரேக்க நாட்டில் அமைந்துள்ள அதோஸ் மலையில் இயற்கையை நேசியுங்கள் (Love Trees) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு செல்பவர்கள் இயற்கையில் உறைந்திருக்கும் இறைவனை சுவாசிப்பது உறுதி. அங்கு சென்ற துறவி ஒருவர் இவ்வார்த்தைகள் விவிலியத்தில் எழுதப்படாத கடவுள் கட்டளை என்கிறார்.
  • வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் பசுமை முயற்சிகள் 

    Jul 21, 2019
    பூமிக்கோளத்தைக் காப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் அக்கறையைத் தொடர்ந்து, வத்திக்கானில், பசுமை முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, வத்திக்கான் தோட்டங்களின் பொறுப்பாளர், ரபேல் இஞசியோ டோர்னினி அவர்கள் இத்தாலியின் ANSA செய்தியிடம் கூறினார்.
  • தெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும் 

    Jul 20, 2019
    நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால், குறைந்தது 93 சிறார் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
  • உயிர் பெற்ற நாகநதி : வேலூர் மாவட்டப் பெண்கள் 

    Jul 19, 2019
    தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.
  • இறந்த புலியின் வயிற்றில் துண்டு பிளேடு கண்டுபிடிப்பு 

    Jul 18, 2019
    நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன.
  • தமிழர்களே நாம் எங்கே தொலைத்தோம் இரண்டு லட்சம் நெல் வகைகளை?

    Jul 12, 2019
    தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் இரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் இரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும். நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளைக் கையாண்டனர். தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு, விதைகளை காய வைத்தனர். இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.