சிட்டுக்குருவி ||ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.03.2024 ||Veritas Tamil

சிட்டுக்குருவி 
 அலைபேசி கதிரியக்க பிரச்சினை
சிட்டுகுருவி மறைந்த வேதனை
அறிவியல் முன்னேற்ற சாதனை
பறவைகள் எதிராக சோதனை 
புகைப்படங்கள் காணும் கற்பனை
பாதுகாப்பு நடவடிக்கை யோசனை 
மாற வேண்டும் சிந்தனை 
அதுவே மனிதநேயம் சாதனை

 காக்கை குருவி முன்னோர்கள் மறை
அரிசி தானியங்கள் கொஞ்சம் இறை
பயிர்கள் காக்கும் காவலன் நிறை
குருவிகள் மறைந்து போனது குறை

பூச்சி புழுக்கள் திண்ணும் இரை
மரங்கள் வெட்டி ஆனது கூரை
கூடுகள் இல்லாது மடியும் நிலை
மழை பெய்யாமல் வறட்சி விலை
மாற வேண்டும் மனநிலை
வாழ வேண்டும் வரும் தலைமுறை

சாமானியன்.                                                     
ஞா சிங்கராயர் சாமி.                              
கோவில்பட்டி