களைவோம் சுமைகளை! வெல்வோம் மனங்களை! | அருட்சகோதரி செலஸ்டி சலேஸ், SSAM | Veritas Tamil

புரிதல் புனிதமானது

மண்ணுக்குள் ஆயிரம் குப்பைகளிலிருந்தாலும்

மெளனமாய் மடிந்து முளைக்குது விதை.

தன்னைப் பேணாதவர் பலரிருந்தாலும்

மெளனமாய் தனை வழங்குது தாவரம்

மேகத்துக்குள் பலவிதமான மாசுகளிலிருந்தாலும்

மெளனமாய் சுமந்து நிற்குது மழைநீரை

கடலுக்குள் ஆயிரம் ஜீவராசிகளிலிருந்தாலும்

தாங்கி உணவூட்டுது கடல்நீர்.

மனிதனுக்குள் ஆயிரம் குறைகளிலிருந்தாலும்

மெளனமாய் அன்பு செய்யுது தெய்வம்.

மனதிற்குள் ஆயிரம் கவலையிருந்தாலும்

மெளனமாய் பாசமழை பொழியுது தாயுள்ளம்.

உடலிலே ஆயிரம் வலியிருந்தாலும்

மெளனமாய்குடும்பத்தைபேணுவான்தொழிலாளி

அவமதித்த அனுபவம் ஆயிரமிருந்தாலும்

மௌனமாய் உதவுவான் உயிர்நண்பன்.

விளைச்சலில் ஏமாற்றம் ஆயிரமிருந்தாலும்

மெளனமாய் விதைப்பான் விவசாயி.

முயலும்போது ஆயிரம்முறை வீழ்ந்தாலும்

மெளனமாய் வெல்லுவான் சாதனையாளன்.

எதிர்த்து நிற்போர் ஆயிரம் பேரிருந்தாலும்

மௌனமாய் போராடுவான் மாமனிதன்.

மௌனமாய் இருத்தலே புரிதலுக்கு வழி.

அமைதியாய் இருந்தவர் அழிந்ததே இல்லை.

இறந்தும் வாழ்வர் அண்ணல் அசிசி போல...

நின்று! கவனித்து!! செல்வோம்!!!!

களைவோம்! சுமைகளை! வெல்வோம்! மனங்களை!

அருட்சகோதரி செலஸ்டி சலேஸ், SSAM