2026 “Laudato Si’ அனிமேட்டர்கள்” பயிற்சி திட்டத்திற்கான பதிவு தொடக்கம் ! | Veritas Tamil
2026ஆம் ஆண்டிற்கான Laudato Si’ Animators Formation Program (லௌதாத்தோ சி’ அனிமேட்டர்கள் உருவாக்கப் பயிற்சி திட்டம்) உலகம் முழுவதும் இருந்து பதிவு செய்ய திறக்கப்பட்டுள்ளதாக Laudato Si’ Movement அறிவித்துள்ளது. நம் “பொதுவான இல்லமான பூமியை” பாதுகாக்க நம்பிக்கையுள்ள அனைவரையும் சுற்றுச்சூழல் மாற்றத்தில் ஆழப்படவும் நடைமுறை செயல்களில் ஈடுபடவும் இந்த திட்டம் அழைக்கிறது.
இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, Laudato Si’ என்னும் சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தை அவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமூக நீதி மற்றும் பொறுப்புடன் இணைக்கும் முழுமையான அணுகுமுறையை இது முன்னிறுத்துகிறது.
திட்டத்தின் முக்கிய நோக்கமாக முழுமையான சூழியல் மற்றும் கத்தோலிக்க சமூகப் போதனைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் .தனிப்பட்ட சுற்றுச்சூழல் மாற்றத்தையும் நிலைத்த வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும்
சமூகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை வழிநடத்த அடிப்படைத் தலைவர்களை உருவாக்கும்
பங்கேற்பாளர்கள் அனுபவமுள்ள வழிகாட்டிகளின் உதவியுடன் பயிற்சி பெறுவதுடன், உலகளாவிய சூழியல் சேவை வலையமைப்பின் ஒரு பகுதியாக இணைவார்கள்.
ஏப்ரல் 15, 2026 – நம் அழகான இல்லத்திற்கு என்ன நடக்கிறது?
ஏப்ரல் 22, 2026 – நம் நம்பிக்கை என்ன கூறுகிறது? (Laudato Si’ மற்றும் கத்தோலிக்க சமூகப் போதனை)
ஏப்ரல் 29, 2026 – தனிப்பட்ட சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு
மே 6, 2026 – விசுவாசத்தின் ஒளியில் செயல்பாடு
Laudato Si’ வாரம் நடைபெறும் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் உள்ளூர் சமூகத்தில் சிறிய ஆனால் நடைமுறை சுற்றுச்சூழல் செயலை வடிவமைத்து செயல்படுத்தும் “Seed Project” ஒன்றை மேற்கொள்வார்கள்.பயிற்சி ஜூன் 17, 2026 அன்று பட்டமளிப்பு விழா நிறைவடையும்.
இறுதியாக ,அனைத்து பாடங்களையும் முடித்து, Seed Project அறிக்கையை சமர்ப்பித்து, இயக்கத்தின் பாதுகாப்பு கொள்கை மற்றும் நடத்தை விதிமுறையில் ஒப்பமிட்ட பங்கேற்பாளர்களுக்கு பூர்த்தி சான்றிதழ் வழங்கப்படும்.