தாய்மொழி இனிது; தமிழ் மொழி அதனினும் இனிது! | Veritas Tamil

தாய்மொழி இனிது; தமிழ் மொழி அதனினும் இனிது!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார் முன்டாசுக் கவிஞன் பாரதி. ஒரு மனிதனின் அடையாளம், பண்பாடு, சிந்தனை மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகத் திகழ்வது அவனது தாய்மொழி மொழிகளின் முக்கியத்துவத்தைப் போற்றவும், அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் மையப்பொருள்: "பன்மொழிக் கல்வியில் " (Youth voices on multilingual education) என்பதாகும்.

வரலாற்றுப் பின்னணி:
தாய்மொழி நாளின் வரலாறு தியாகத்தால் எழுதப்பட்டது. 1952 ஆம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருது மொழிக்கு எதிராகத் தங்கள் தாய்மொழியான வங்க மொழியைப் பாதுகாக்கப் போராடி உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக இத்தினம்

வங்கதேசத்தின் இந்த முன்முயற்சியை ஏற்று, 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் இதற்கான பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இதனை முறையாக எற்றுக்கொண்டது. 2008 ஆம் ஆண்டை உலகளாவிய ஆண்டாக அறிவித்து, பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் காண உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு விடுத்தது.
மாறிவரும் மொழிச் சூழல்:

பன்மொழித்தன்மையின் அவசியம்

இன்றைய காலகட்டத்தில இடப்பெயர்வு, விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றால் மொழியியல் சூழல் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. பன்மொழித்தன்மை (Multilingualism) என்பது வெறும் சமூக எதார்த்தம் மட்டுமல்ல, அது ஓர் அடிப்படை மனிதப் பண்பு மற்றும் சக்திவாய்ந்த கல்வி அணுகுமுறையாகும்.
மிக இம்மாற்றத்தில் இளைஞர்களின் முக்கியமானது. அவர்கள் எண்ணிம (டிஜிட்டல்) தளங்களில் உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கங்களை உருவாக்குவதன் மூலமும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறுபான்மை மொழிகளுக்கு உயிர் கொடுப்பதன் மூலமும் மொழியியல் பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்றுகின்றனர். மொழி என்பது கற்றல், மேம்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் அண்மைக்கால புள்ளிவிவரங்கள் நம்மைனியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அதாவது, உலகில் சைகை மொழிகள் உட்பட சுமார் 8,324 மொழிகள் இருப்பதாகவும், அதில் 7,000 மொழிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. மேலும், சராசரியாக ஒவ்வோர் இரண்டு வாரத்திற்கும் ஒரு மொழி மறைந்து போகிறது என்பதும், ஒரு மொழி அழியும்போது, அதனுடன் அந்த இனத்தின் கலாச்சாரம், தனித்துவமான சிந்தனை முறை மற்றும் பாரம்பரிய அறிவு ஆகிய அனைத்தும் புதைக்கப்படுகின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன.
அவ்வாறே, பயன்பாட்டில் உள்ள 7,000 மொழிகளில் சில நூறு மொழிகள் மட்டுமே கல்வி முறைகளிலும் பொதுத்தளங்களிலும் இடம்பிடித்துள்ளன. டிஜிட்டல் உலகில் வெறும் 100-க்கும் குறைவான மொழிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், 40 விழுக்காடு குழந்தைகளின் தவிப்பு பன்மொழிக் கல்வி குறித்துப் பேசினாலும், நிஜமான சவால்கள் இன்றும் நீடிக்கின்றன.
உலகளவில் 40 விழுக்காடு கற்பவர்கள், தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறவில்லை. குறிப்பாக, பழங்குடியினர். புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையின இளைஞர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தங்களுக்குப் புரியாத மொழியில் கல்வி கற்பது என்பது அவர்களின் அறிவுத்திறனை முடக்குவதோடு, இடைநிற்றலுக்கும் வழிவகுப்பதாக மொழி வல்லு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பத்தின் பங்கு
முன்னர் மொழிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட தொழில்நுட்பம், இன்று அவற்றைப் பாதுகாக்கும் அரண மாறியுள்ளது. ஏ.ஐ (AI) மற்றும் மொழிபெயர்ப்புக கருவிகள் மூலம் எளிய மொழிகளும் இன்று உலக மேடைக்கு வருகின்றன. இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் 'பாட்காஸ்ட்' (Podcast) கானொளிகள் மற்றும் வலைப்பதிவுகளை உருவாக்குவதன் மூலம் மொழிகளுக்குப் புத்துயிர் அளிக்கின்றனர்.

இறுதியாக,
மொழிகள் என்பவை வெறும் தகவல் தொடர்புக்கான கருவிகள் அல்ல, அவை நமது மூதாதையர் விட்டுச்சென்ற அறிவும் சுரங்கங்கள். ஒரு மொழியைக் காப்பது என்பது ஓர் எதிர்க சந்ததியைக் காப்பதாகும். பன்மொழிக் கல்வியை ஆதரிப்ப மூலமும், இளைய தலைமுறையினரின் மொழியியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதன் மூலமும் நாம் ஒரு சிறந்த, சமத்துவமான உலகத்தைப் படைக்க முடியும்.
ஆகவே, இந்த உலகத் தாய்மொழி நாளில், நம் தாய்மொழியைப் போற்றுவதோடு, பிற மொழிகளின் தனித்துவத்தையும் மதிக்க உறுதி ஏற்போம்.