மனிதனாக இரு. ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.05.2025

மலர்கின்ற மலர்களெல்லாம், மாலை ஆவதில்லை. தன் குணத்தாலும், மணத்தாலும் தகுதி பெறுகின்றன.

அது போல் தான் பிறக்கின்ற மனிதர் எல்லாம் சிறப்பதில்லை.

தன் பணத்தால் எதையும் வாங்க நினைத்தவரை விட, மனதால் பிறர்க்காக வாழ்ந்தவரை காலம் என்றும் மறந்ததில்லை.

ஆகையால் மனிதனாக இரு.

எப்படி என்றால் எல்லா தானங்களுமே பிறரை வாழ வைக்கும் .

ஆனால் நிதானம் மட்டுமே. தன்னையும் வாழ வைத்து பிறரையும் வாழ வைக்கும்.

கோபமென்பது வலுவான காற்றைப் போன்றது சற்றே நேரத்தில் அது தணிந்து விடும்.அதற்குள் பல மரங்களின் கிளைகள் முறிந்திருக்கும்.

நாம உண்மையா இருந்தோம்னு நம்ம மனசுக்கு தெரிஞ்சா போதும். நம்ம கூட இருக்குறவங்க அதை நம்பனும்னு எந்த அவசியமும் இல்லை.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எம் மக்களுக்கு வாழ்வும் நம்பிக்கையும் மனநிறைவும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி