வாழ்க்கை ஓர் வரம் ! ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.05.2025

வாழ்க்கையைச் சந்திப்பதற்கும் வாழ்க்கையில் சந்திப்பதற்கும்
நிறைய வேறுபாடிருக்கிறது

வாழ்க்கையைச் சந்தித்தல் வரம்
வாழ்க்கையில் சந்தித்தல் தவம்

மொத்தத்தில்
இந்தப் பெரு வாழ்வு
வரத்தையும் தவத்தையும்
கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது

வாழ்க்கையைச் சந்திக்கும் போது
மொத்தமாயும்
வாழ்க்கையில் சந்திக்கும் போது
தனித்தனியாயும்
நம்மை பழக்கிக்கொண்டது நம் பிழை.

வாழ்க்கையைச் சந்திக்கும் போது
இன்பமாயும்
வாழ்க்கையில் சந்திக்கும் போது
துன்பமாயும்.
இன்னும்
இலகுவாய் சொல்வதென்றால்
வரமெது தவமெது
என கடைசிவரை தெரியாமல்தான்
ஆளாளுக்கு
இந்த வாழ்வை
பந்தாடிக் கொண்டிருக்கிறோம்.

---சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி