காக்கைகள் மாநாடு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024

காலையிலே ஆலமரத்தில் காக்கைகளின் மாநாடு!
சோலையிலே சுதந்திரநாள் ஊர்வலமாம் ஏற்பாடு!
உலகிலுள்ள காக்கைகளை வரவேற்று களிப்போடு
உண்மையுள்ள காக்கைபுகழை பாடுகிறேன் பாட்டோடு!
காக்கையில்லா ஊருமில்லை.
மனிதரோடு பழகும்பிள்ளை!
சேர்க்கையிலே ஒன்றுகூடி வாழுவதால் பேதமில்லை!
காக்கைக்கொரு கவலம் வைத்து உண்ணுவது அன்பின்எல்லை!
கரைந்துண்ணும் அழகுபாரீர்! காக்கைகள்போல் மனிதரில்லை!
காலையிலே எழுந்துவிட்டால் மாலைவரை ஓய்வுயில்லை! கூடிவாழும் காக்கைகளை பாடஒரு வார்த்தையில்லை!
காக்கைகளின் மாநாட்டில் தீர்மானம் இதுவென்பேன்.
காக்கைகள் ஓய்வெடுக்கும் மரங்களை வெட்டாதீர்!
காக்கா பிடிப்பதிலே தேறிவிட்ட மனிதர்களே. கேளுங்கள்.
காக்கைகளின் ஒற்றுமையை உளமாற போற்றுங்கள்!
சாமானியன்.
ஞா சிங்கராயர் சாமி.
கோவில்பட்டி
Daily Program

- Reply
Permalink