இயற்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024

வானும், மண்ணும் விரைந்துரைப்பது ஒன்றே தான்
காற்றும், கடலும், காவியமிசைப்பதும் ஒன்றே தான்
பகலவனும், பறவைகளும், பறை சாற்றுவது ஒன்றே தான்
மறையும், மானுடமும் முறையிடுவது ஒன்றே தான்
ஏய்! மானிடா நீயும் நானும் வேறல்ல
தனித்திருப்பதும் அல்ல,
விட்டு விலகி இருப்பதும் அல்ல!
மாறாக,
ஒன்றுக்குள் ஒன்றாக,
அந்த ஒன்றின் உணர்வாக,
அதே உணர்வின் அன்பாக,
அந்த அன்பின் அமைதியாக,
அதே அமைதியின் ஆனந்தமாக,
அதே ஆனந்தமே வாழ்வாக வாழப் பிறந்திருக்கிறாய்
உன்னில் இருப்பதை உணர்
உலகமே உன் வசப்படும்
இயற்கை எனும் இறை வசந்தத்தில்
சாமானியன்
ஞா.சிங்கராயா் சாமி
கோவில்பட்டி
Daily Program
