ஞானம் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

பள்ளிப் பாடங்களில் இருந்து கற்றுக்கொள்ளப்படுவது அல்ல; வாழ்க்கை என்னும் பள்ளி தரும் அனுபவம் மூலம் கற்றுக் கொள்ளும் அரிய பாடம்!

அறிவு பேசும்; ஞானம் செவிமடுக்கும். 
ஞானம் நீண்ட காதுகளையும் குறுகிய நாவையும் பெற்றிருக்கும்!

ஞானம் 
பேச்சை விட அமைதியாய் இருத்தலே சிறந்தது என்கிறது.
பெறுவதைவிடக் கொடுத்தலே சிறந்தது என்கிறது.
புகழைவிட நற்பண்புடன் வாழ்தலே சிறந்தது என்கிறது.
வெற்றியைவிட மகிழ்ச்சியே சிறந்தது என்கிறது. 
செல்வத்தைவிட மனநிறைவே சிறந்தது என்கிறது.
தற்பெருமையை விட தாழ்ச்சியே சிறந்தது என்கிறது!

உங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாய் இருங்கள்; இல்லாததைப் பற்றி ஒருபோதும் எண்ணாதீர்கள். ஒன்றுமே இல்லாதவர்கள் கூட புன்னகையோடு வாழ்கிறார்கள் என்கிறது ஞானம்!

நம்மையும்  பிறரையும் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் பற்றி நாம் எவ்வளவு குறைவாகப் புரிந்து வைத்துள்ளோம் என்று உணர்வதே உண்மை ஞானம்!

அறிவைப் பெற நிறைய படியுங்கள்; ஞானம் பெற உங்களைச் சுற்றி உற்றுநோக்கிக் கவனியுங்கள். இதயம் தாழ்ச்சியோடு இருக்கும்போது மனம் ஞானம் அடைகிறது!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.