“ஒரு சகப் பயணியாக” இருக்க உறுதியளித்தார். “இதுவே எனது விருப்பம்: ஆளுவதற்கு மட்டுமல்ல, கேட்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், சேவை செய்வதற்கும் உங்கள் ஆயராக இருப்பது,” என்று அவர் கூறினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
மதமாற்றத் தடைச் சட்டங்களை மீறியதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு போதகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் ஜெபக்கூடம் ஜூலை 23 அன்று உத்தரப் பிரதேச காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி-ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவப் பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த மனித மிருகங்களின் 26 நிமிட வைரல் வீடியோவுக்கு இந்திய கிறிஸ்தவ பெண்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர் .
சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
அருளாளர் அருள்சகோதரி ராணி மரியா வட்டத்தில் அவர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான "முகமற்றவர்களின் முகமாக ", ஜூலை 12 அன்று மத்திய திரைப்படச் சான்றிதழின் இந்திய வாரியம் (CBFC) அங்கீகரித்துள்ளது.
கர்நாடக அரசின் 14 வது பட்ஜெட் கூட்டத்தொடரில் நூறு கோடி ரூபாயை கர்நாடக கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக ஒதுக்கியதற்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சோடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.