திருத்தந்தையின் இந்தோனேஷியா திருப்பயண நிகழ்வுகள்
இந்தோனேசியாவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் வலுப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பன்முகத்தன்மை மற்றும் சமய நல்லிணக்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், பரந்த விரிந்த கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அமைதி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கிய தூண்களாக சமூக நீதி மற்றும் இறை ஆசிரை பெற்றிட அழைப்பு விடுத்தார்.
செப்டம்பர் 4ஆம் தேதி அரச மாளிகையில் ஜனாதிபதி, அரச பிரதிநிதிகள் மற்றும் உயர் ராணுவ படை தளபதிகள் கலந்துகொண்ட நிகழ்வில் திருத்தந்தை தனது உரையை ஆற்றினார்.
இந்தோனேசிய நாட்டின் தாரக மந்திரமான "பின்னேகா துங்கல் இக்கா" (வேற்றுமையில் ஒற்றுமை) அதன் கலாச்சார, இன, மொழி மற்றும் மத வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமைக்கான நாட்டின் உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டினார்.
நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த நல்லிணக்கம், நியாயமான மற்றும் அமைதியான சமுதாயத்தை வளர்ப்பதற்கான அடித்தளமாக செயல்படுகிறது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு கருவியாக மதங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் கூற்றுப்படி, பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதன் மூலம், இந்தோனேசியா தீவிரவாதம் மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத நிலை போன்ற சவால்களை திறம்பட எதிர்கொள்ள முடியும், இது சில சமயங்களில் வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டுவதற்கு மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி விடக்கூடாது.
இந்தோனேசியாவின் 1945 அரசியலமைப்பின் முதன்மை பக்கத்தை குறிப்பிட்ட திருத்தந்தை சமூக நீதி மற்றும் இறை ஆசிரை நாட்டின் இறையாண்மைக்கு மூலைக்கல்லாக அமைத்துள்ளது என்றார்.
"நம்பிக்கை, சகோதரத்துவம், இரக்கம்", போன்றவை அரசியலமைப்பு விழுமியங்களுடன் எதிரொலிக்கிறது மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இந்தோனேசியர்களை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அமைதி என்பது நீதியின் உண்மையான தீர்வு என்பதை வலியுறுத்தி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவுபடுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மனித உரிமை, நிலையான வளர்ச்சி மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அரசியல் தலைவர்களை வலியுறுத்தினார்.
தனது நிறைவு செபத்தில் , இந்தோனேசியா தொடர்ந்து அமைதி மற்றும் எதிர்கால சவால்களை தைரியத்துடனும் எதிர்கால பிரச்சனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு ஆசீர்வதிக்கப்படும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
2024 செப்டம்பரில் ஆசிய-பசிபிக் பகுதிக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அப்போஸ்தலிக்க திருப்பயணத்தில் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகள் உள்ளன.
அவரது பயணத்திட்டத்தின் முதல் இடமான இந்தோனேசியா, செப்டம்பர் 3 முதல் 6 வரை திருத்தந்தையை வரவேற்று இறைஆசிர் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது
1970 மற்றும் 1989 ஆம் ஆண்டு முறையே இந்தோனேசியாவிற்கு வருகை தந்த மறைந்த திருத்தந்தைகள் ஆறாம் பால் மற்றும் இரண்டாம் ஜான் பால் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 11 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க திருஅவையை அவர் வழிநடத்தத் தொடங்கியதிலிருந்து இதுவே திருத்தந்தையின் மிக நீண்ட அப்போஸ்தலிக்க சுற்றுப்பயணத்தைக் குறிக்கிறது.