சிந்துதுர்க் மறைமாவட்டதிற்கு புதிய ஆயராக அருட்தந்தை அக்நெலோ பின்ஹெய்ரோவை அவர்கள் தேர்வு ! | Veritas Tamil

 திருத்தந்தை அவர்கள்  மேற்கு இந்தியாவில் உள்ள திருஅவைக்கு, கோவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை அக்நெலோ பின்ஹெய்ரோவை சிந்துதுர்க் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார்.

இந்த நியமனம் 2026 பிப்ரவரி 14 அன்று மதியம் 12 மணிக்கு வத்திக்கானில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், கோவாவில் மாலை 4:30 மணிக்கு இந்த தகவல் வெளியிடப்பட்டது.

பேராயர் இல்லத்தில் நடைபெற்ற அறிவிப்பை கார்டினல் ஃபிலிப் நேரி பெர்ராவ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் துணை ஆயர் ஆல்வின் பாரெட்டோ, துணை ஆயர் சிமியான் பி. பெர்னாண்டஸ், மொன்சினியர் ஆண்ட்ரூ டி’மெல்லோ மற்றும் கோவா, சிந்துதுர்க் பகுதிகளில் இருந்து திருஅவையை சேர்த்தவர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

ரேடியோ வேரித்தாஸ் ஏசியாவிடம் பேசிய அவர், இந்த நியமனத்தை வெற்றியின் தருணமாக மட்டும் கருதாமல் தாழ்மையின் தருணமாக உணர்வதாக விவரித்தார்.திருஅவை  ஊடகப் பணியை அவர் பாராட்டி,
“நீங்கள் உலகெங்கும் மக்களை சென்றடைகிறீர்கள்; கிறிஸ்துவின் பணி செய்கிறீர்கள்; அதைத் தொடர்ந்து செய்யுங்கள்,” என்றும் வாழ்த்து   கூறினார்.

மேலும் அவர் ,இன்றைய உலகில் கெட்ட செய்திகள் மிக விரைவாகப் பரவுகின்றன; ஆனால் நல்ல செய்திகள் பெரிதாகப் பகிரப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் உலகிற்கு நல்ல செய்தி அவசியம் — அது மதச் செய்தியாக மட்டுமல்ல, நம்பிக்கையுடன் வாழ உதவும் ஒரு வாழ்வுப் பார்வையாகும் என்றார்.

இறுதியாக ,பயம் மற்றும் நம்பிக்கை இரண்டையும் தாங்கிய இந்த செபத்துடன்  , அவர் தனியாக செயல்படாமல்  மக்களுடன் இணைந்து பயணிக்கும்  ஒரு மேய்ப்பராக இருப்பார் என்ற செய்தியை அவர்களுக்கு வழங்கினார்.

Tamil Survey Popup Image