ஒரு கால்.. ஒரு கதை.. | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

"ஒரு கால் தானே போயிற்று. இரு கால்கள் இல்லையே!" என்று தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்தவர் ஹி யீயீ என்பவர். சீனாவைச் சேர்ந்த 21 வயதான இவர் ஒரு கால்பந்தாட்ட வீரர். சிறுவனாக இருந்தபோதே யீயீ கால்பந்தாட்டத்தின்மீது ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார்.

2008ஆம் ஆண்டு இவரின் விளையாட்டைக் கண்டு ஆச்சரியம் அடைந்த பிரெஞ்சு நாட்டுக் கால்பந்துவீரர் ஒருவர் இவரைப் பிரான்சுக்கு அழைத்து பயிற்சி மேற்கொள்ள உதவ முன்வந்தார். பிரான்சுக்குச் செல்லத் தயாராக இருந்தபோதுதான் இவரது வாழ்வில் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

13 வயதிலிருந்தே யீயீக்கு காலில் ஆஸ்டியோசார்கோமா என்னும் நோய் இருந்து வந்தது. காலில் ஏற்படும் ஒருவித வலி தொடர்பான நோய். காலைப் பரிசோதித்துப் பார்த்ததில் அது எலும்புப் புற்றுநோய் எனத் தெரிய வந்தது. பிரான்சுக்குச் சென்று பயிற்சிபெற்று கால்பந்தாட்ட விளையாட்டில் தடம் பதிக்கும் கனவோடு காத்திருந்த யீயீக்கு, தனது இடது காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நம்பிக்கை இழக்காமல் தன்னம்பிக்கை நாயகனாய் கைகள் இரண்டிலும் ஊன்றுகோலின் உதவியுடன் மீண்டும் கால்பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், மீண்டும் இன்னொரு விதத்தில் அவருக்குத் தடங்கல் ஏற்பட்டது. அது போட்டிக்காக நடத்தப்படும் 'புரோஃபெசனல்' கால்பந்து விளையாட்டுகளில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனாலும் மனம் தளராமல் 'அமெச்சூர்' கால்பந்தாட்டப் போட்டிகளில் அவர் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில் இவர் மட்டும்தான் அவமானங்கள்தாம் ஏராளம். அவற்றையெல்லாம் ஓர் ஓரத்தில் மாற்றுத்திறனாளி. தொடக்கத்தில் தோல்விகளைவிட இவர் சந்தித்த இன்று தமது ரசிகர்களால் 'சிறகொடிந்த தேவதையாக', 'மேஜிக் பாயாக' வலம் வருகிறார்.

வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கப் பழகியவர்களுக்கு வாழ்க்கை புன்னகையாகவே அமையும்.  

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.