அழகென்பது மனது தானே ! அருட்சகோதரி. செலஸ்டி சலேஸ் (SSAM) | Veritas Tamil
விதியை மதியால் வெல்வர் – இளையோர்
விதியின் வலையில் சிக்கி தவிக்கும் இளையோர் பொல்லாங்கு , பேராசை,தீமை , பொறாமை , சண்டைச்சச்சரவு , வஞ்சகம் , தீவினை , புறங்கூறல் , அவதூறு பேசுதல் , கடவுளை வெறுத்தல் , செருக்கு , வீம்பு பாராட்டுதல் , தீயவழிகளைக் கண்டுபிடித்தல் , பெற்றோர்க்கு கீழ்ப்படியாமை , சொல் தவறுதல் , மதிகேடு , பாசமின்மை , இரக்கமின்மை போன்ற நெறிகேடுகளைப் பெற்றிருப்பர்.(உரோமையர் 1 : 28 – 31)
ஏனெனில்…
விதி புலம்பும் மதி துலங்கும் , விதி கொல்லும் மதி வெல்லும்
விதி தடை மதி விடை , விதி விரக்தி மதி கீர்த்தி
விதி இகழும் மதி மகிழும் , விதி மூடதனம் மதி மூலதனம் ,
விதி சிற்றரசு மதி பேரரசு , விதி குறுகியது மதி பரந்தது
விதி கெடுக்கும் மதி கொடுக்கும் , விதி சுயநலம் மதி பொதுநலம்
விதி முடக்கி மதி முடுக்கி , விதி இருள் மதி அருள்
விதி களர்நிலம் மதி நன்நிலம் , விதி அறிவு மதி ஞானம்
விதி சாரமற்றது மதி சாரமுள்ளது , விதி கெட்டகனி மதி நற்கனி
விதி மணல் வீடு , மதி பாறை வீடு
விதி தனக்கென செபிக்கும் , மதி பிறர்கென செபிக்கும்
விதி வீட்டிற்கு உழைக்கும், மதி நாட்டிற்கு உழைக்கும்
என்பதை நன்கு அறிந்த அடர்த்தியான ஆளுமையுடைய இளையோர் , தங்கள் திறமையால் விதியை மதியால் விரட்டி , அன்புத்தீயை மூட்டி , புத்தியை தீட்டி , பக்தியை கூட்டி , சக்தியை ஊட்டி , யுக்தியைக்காட்டி , முடக்குவோரை ஓட்டி , முடங்கி கிடப்போருக்கு அறிவு புகட்டி , வானாளவிய புகழை ஈட்டி , வாழ வழி செய்கிறார்கள். அதனால் நாடும் வீடும் செழிக்கிறது. அழகென்பது மனது தானே !
வாழ்க இளையோர் ! வளர்க நம் நாடு !
அருட்சகோதரி. செலஸ்டி சலேஸ் (SSAM)
மீஞ்சூர்