தென்னிந்தியாவின் முதல் கத்தோலிக்க இசை நிகழ்ச்சி: சென்னை இளைஞர்கள் சாதனை ! | Veritas Tamil
The NOVA என்ற இசை நிகழ்ச்சியானது, பிப்ரவரி 7 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள Good Shepherd Convent அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தென்னிந்தியாவின் முதல் கத்தோலிக்க இசை நிகழ்ச்சியாக ஆன்மீக ஒலியுடன் புதிய வரலாற்றை படைத்தது. இந்த இசை நிகழ்ச்சி, சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட இளையோர் இயக்கத்தின் St. Cecilia's Ensemble பாடகர் குழுவால், உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் ஆசீரிலும் வழிகாட்டுதலிலும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் பங்கேற்றதுடன், 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளில் இணைந்து பணியாற்றினர். பல முன்னணி கத்தோலிக்க இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டு, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் துதி இசையின் வலிமையை ஒரே மேடையில் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி, St. Cecilia's Ensemble-இன் தலைவர் ஷெரின் நான்சி அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பிலும், உயர்மறைமாவட்ட இளைஞர் இயக்குனர் அருள்பணி. ரொனால்ட் ரிச்சர்டு அவர்களின் வழிகாட்டுதலிலும் வெற்றிகரமாக நடைபெற்றது. கூடுதல் சிறப்பாக இந்நிகழ்ச்சியின் ஊடக பங்குதாரராக மாதா தொலைக்காட்சி இணைந்தது. The NOVA தென்னிந்திய கத்தோலிக்க இசை நிகழ்ச்சி வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல்லாகத் திகழ்ந்தது.