கத்தோலிக்க திருவுருவங்கள் குறித்து தவறாக புரிந்துக்கொள்ளும் விமர்சகர்கள்!| Veritas Tamil

 கத்தோலிக்க திருவுருவங்கள் குறித்து  தவறாக புரிந்துக்கொள்ளும் விமர்சகர்கள்!

கத்தோலிக்க பக்தியை அண்மைக் காலங்களில் கேலி செய்யும் போக்கு குறிப்பாக, பிலிப்பைன்சில் உள்ள கருப்பு நாசரேத்து (Black Nazarene) பக்தியை “மரத்தைக் கடவுளாக வணங்குதல்” அல்லது “எரிந்த கடவுள்” என கூறும் குற்றச்சாட்டுகள் கத்தோலிக்க நம்பிக்கையை  உண்மையாகப் புரிந்துகொள்வதிலிருந்து உருவானவை அல்ல; மாறாக, அதைத் தவறாகப் புரிந்துகொண்டதிலிருந்து தோன்றியவையாகும்.

கருத்து வேறுபாடு சட்டபூர்வமானது; ஆனால் தவறான சித்தரிப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது .திருவுருவமே கடவுள் என நம்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் சில விமர்சகர்கள், கத்தோலிக்கர்கள் திருவுருவத்தையே கடவுளாக கருதுவதாக நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.
கத்தோலிக்கர்கள் வணங்குவது கிறிஸ்துவைதான் ஒரு பொருளை அல்ல.திருவுருவங்கள் என்பது, அவை குறிக்கும் நபரின் மீது பக்தியைத் திருப்புவதற்கான குறியீடுகள் மட்டுமே; கடவுளுக்குப் பதிலாக நிற்கும் பொருட்கள் அல்ல.

மரம், வண்ணம் அல்லது கல் போன்ற எந்தப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும், அந்த திருவுருவத்திற்கு கத்தோலிக்க நம்பிக்கையில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இல்லை.
இந்த தவறான புரிதல், திருவுருவங்களின் முன் தலை வணங்குதல் அல்லது முழங்கால் இடுதல்  போன்ற உடல் செய்கைகளுக்கு எதிரான விமர்சனங்களில் வெளிப்படுகிறது.
திருவுருவங்கள் ஆன்மீக உயிர்களாக அல்ல; கடவுளின் பக்கம் பக்தியை வெளிப்படுத்தும்   பிரதிநிதிகளாகவே கருதப்படுகின்றன. அந்த உடல் செய்கை, பொருளின் தெய்வீகத்தைக் குறிக்கவில்லை; கிறிஸ்துவுக்கான மரியாதையை வெளிப்படுத்துகிறது.

இறுதியாக ,பல கத்தோலிக்கர்கள்  மேற்கொண்டு வரும் பிரச்சனைகள்  நம்பிக்கையில் அல்ல; அதைச் சொற்களில் விளக்குவதில்தான் உள்ளது.அவர்கள் கத்தோலிக்க நம்பிக்கையில் தான்  வாழ்கிறார்கள்; ஆனால் அதை எப்போதும் தெளிவாக விளக்க முடியவில்லை.இவற்றைப்பற்றி விளக்குவது என்பது சவாலாகவே அமைகிறது.