இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! ” உரோ 12”2) என்று தான் பவுல் அடிகளும் அழைப்பு விடுக்கிறார்.
‘இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (திப. 4:12) எனும் பவுல் அடிகளின் படிப்பினையின் உண்மையை அறிந்து வாழ்வோம்.
இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ, நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம். நிலைவாழ்வு நமதாகும்.
உலகில் அல்ல மாறாக, அவரில் அமைதியை நாடுவோம். அமைதி கிட்டும். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே’ எனும் வரிகளுக்கு ஏற்ப உண்மை அமைதிக்கு ஊற்றாக இருப்பவர் ஆண்டவர் இயேசு. அவரை விடுத்து உலக இன்பங்களில் அமைதியைத் தேடினால், தேடும் அமைதி கிடைக்கப்போவதில்லை.
ஒரு காலத்தில் தூய ஆவியை கத்தோலிக்கத் திருஅவையில் மறக்கப்பட்ட கடவுளாகத்தான் இருந்தார். ஆனாலும், அவர் உறங்கவில்லை. உலகைப் புதுப்பிக்கும் பணி தூய ஆவியாரின் செயல்பாடாக இருந்து வருவதை நாம் மனதில் கொண்டு அவரைப் போற்றி வழிபடுவதோடு, அவரில் இணைந்து வாழ நம்மை கையளிப்போம்.
இயேசுவின் வழியாகவே நாம் மீட்பையும் விண்ணக வாழ்வைப் பெறவும் முடியும். ஆகவே, நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் வாழ்வும் வழியுமாக இருக்கும் இயேசுவை உலகிற்குத் துணிவோடு வெளிப்படுத்தும் வாழ்வை எப்படி வாழ்வோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். இயேசுவைப் பிறரோடு பகிராத வாழ்வு, பயனற்ற சாட்சிய வாழ்வு.
மாற்கு திருமுழுக்கு யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ விவரிப்பதால் இவரது நற்செய்திக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.
மனிதன் இருக்குமிடமெல்லாம் கடவுள் இருக்கிறார், படைப்பு இருக்குமிடமெல்லாம் படைத்தவன் இருக்கிறான் என்பதில் நம்பிக்கை வைப்போம். அவரே நமக்கு வழியாகவும், ஒளியாகவும் இருப்பார். அவரே நமது நம்பிக்கை ஒளிக்கீற்று.
சந்தர்ப்பவாதிகளுக்கு திருஅவையில் இடமில்லை என்பதை இயேசு இந்த உவமையியின் வழியாக மேலும் எடுத்துரைக்கிறார். கிடைத்தவரை இலாபம் என்று பணி செய்வோர் கொள்ளை புறமாக நுழைவோராவர்.
தனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில் பல்வேறு கேள்விகளை கேட்டு அல்லது சந்தேகங்களை எழுப்பி குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று. அதனால் குழப்பவாதிகள் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
அப்பம் பிட்குதலில் பங்கெடுத்ததால் பவுல் அடிகள் தொடர்ந்து நற்செய்திக்காகப் பயணித்தார். நற்கருணை வாழ்வை வாழ்ந்து காட்டினார். “வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்” (6:57) என்று இயேசு கூறியதைப்போன்று, இன்று அவரது திருவுடலாகிய நற்கருணையின் மக்களாக நாம் வாழ்கிறோம். நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! என்பதைச் சிந்தித்துச் செயல்படுவோம்.
யோசேப்புக்கும், மரியாவுக்கும், பவுல் அடியார், மற்றும் அனைத்து இறைவாக்கினர்களுக்கும் அவரே வழிகாட்டினார். நமக்கும் அவ்வாறே செய்வார் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம்.
நம்மையும் நமக்குள்ளதையும் பகிர வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. நம்மில் உறவுகொண்டு வாழும் எவரும் அழிவுறக்கூடாது என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவம் அழிவுக்கானது அல்ல, மாறாக வாழ்வுக்கானது.
நாளும் அவரோடு உறவில் வாழ முதலில் முற்படுவோம், அதுவே ஓர் உன்னத அற்புதமாக மாறும். கடவுளில் நம் முதன்மை கவனம் இல்லை என்றால், மற்ற அனைத்தும் விரைவில் நம் கவனத்தை ஈர்க்கும். நாம் படுகுழுயில் விழுவோம்.