கோவாவில் நடைபெற்ற சர்வதேச, மதங்களுக்கிடையேயான நல்லிணக்க மாநாடு ! | Veritas tamil

 "மத ஒழுக்கத்திற்கும்  அரசியலமைப்புச் சட்ட ஒழுக்கத்திற்கும் இடையிலான சமநிலை” குறித்த  நல்லிணக்க மாநாடு !

மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியரான ப்ரொஃ. கிஷு தாஸ்வானி, 2026-ஆம் ஆண்டுக்கான சொசைட்டி ஆஃப் பிலார் அமைப்பின் 4-ஆவது “நல்லிணக்க மாநாடு” நடைபெற்றது.  "மத ஒழுக்கத்திற்கும்  அரசியலமைப்புச் சட்ட ஒழுக்கத்திற்கும் இடையிலான சமநிலை” என்ற தலைப்பில் ஒரு  அமர்வை நடத்தினார்.

இந்த சர்வதேச, மதங்களுக்கிடையேயான மாநாடு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற்றது. இதனை சாத்பாவ், பிலார், பிலார் – அருட்தந்தை  அக்னல் கல்லூரி, பணாஜி-நிர்மலா கல்வி நிறுவனம் ஆகியவை பல்வேறு பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்  .

பேராசிரியர் தமது உரையில், இந்திய அரசியலமைப்பு சுதந்திரத்தின் சாசனம் (Charter of Liberty)எனப்ரொஃ. தாஸ்வானி வலியுறுத்தினார். மேலும் அதிகாரம் அரசிடமிருந்து   மக்களுக்குப் போவதில்லை; மாறாக மக்களிடமிருந்து  அதிகாரம் அரசுக்கு வழங்கப்படுகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டிருந்தார் .

மேலும் மக்கள் முதலில் மதச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்த பின்னரே, அரசை ஆள அனுமதித்தனர் என்பதை அவர் நினைவூட்டினார். ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மை ஆட்சி மட்டுமல்ல; அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்ட ஆட்சி (Rule of Law) என்பதே அதன் அடிப்படை என அவர் கூறினார்.மேற்கத்திய அணுகுமுறையில் பொது வாழ்க்கையிலிருந்து மதம் விலக்கப்படுவதால், இந்திய அரசியலமைப்பு எந்த ஒரு மதத்தையும்  சார்ந்திராமல்  , எல்லா மதங்களும் வளர்வதற்கான இடத்தை வழங்குகிறது என்று கூறினார் .

முடிவில் ,இந்த அமர்வானது, மத ஒழுக்கமும் அரசியலமைப்புச் சட்ட ஒழுக்கமும் ஒருவரையொருவர் எதிர்ப்பவை அல்ல; மாறாக, ஜனநாயக சமூகத்தில் நாம்  எவ்வாறு சமநிலையுடன் இயங்க வேண்டும் என்பதற்கான ஆழமான சிந்தனையை வழங்கியது.