கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.
ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
சீடர்கள் இயேசுவிஇடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர் கடவுளை "தந்தை" என்று அழைக்கும் ஓர் இறைவேண்டலை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
யோனாவின் அறிவிப்பைக் கேட்டு , நினிவே மக்கள் தங்கள் வழக்கமான (மற்றும் பாவ) வழக்கங்களிலிருந்து விலகி, ஆண்டவருடைய இரக்கத்திற்காகக் காத்திருந்ததைக் கேள்விப்படுகிறோம்.
கடவுளின் கட்டளைக்கு அனைத்தும் கீழ்ப்படிகின்றன என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. மீன் கூட இறை அதிகாரத்தின் கீழ் உள்ளது என்பதை அறிகிறோம். யோனா தப்பியோடினாலும் கடவுள் அவரை விடவில்லை.
இயேசு அவரை நேருக்கு நேர் கண்டறிந்த சீடர்களின் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று கூறுகிறார். இருப்பினும், இன்று அவர் நமக்கோ இரட்டிப்பான ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.