அதிசய மருந்து | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

மனநிலை 
வாழ்வை மாற்றும் மந்திர சக்தியுடையது.
முடியாததை முடிக்கவும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் புரியாததைப் புரிந்து கொள்ளவும் ஆற்றல் அளிக்கும் அதிசய மருந்து!

உங்கள் மனநிலையை நடுநிலையோடு வைத்திருக்க நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் மகிழ்ச்சியை யாரால் குலைக்க முடியும்?
அமைதியை யாரால் சீரழிக்க முடியும்?!

உங்கள் நேர்மறையான மனநிலை பிரச்சனைகளிலும் வாய்ப்புகளைக் காணச் செய்யும்; இழப்புகளிலும் நம்பிக்கையோடிருக்கச் செய்யும்; தோல்விகளிலும் துவண்டு போகாமல் இருக்கச் செய்யும்; இறப்பிலும் புது வாழ்வை உணரச் செய்யும்!

வலிமையான மனநிலை வாழ்வின் வலிகளையும் வரமாய் மாற்றும்;
துன்பங்களையும் துணிவுடன் எதிர்கொள்ளும்; சவால்களையும் சாதனைகளாக்கும்!

உயரிய மனநிலை உங்களுக்கு இருந்தால், சரிவையும் சமாளிப்பீர்கள்; பிரிவையும் பிளவுபடா உள்ளத்தோடு ஏற்பீர்கள்;
சாத்தியம் இல்லாததையும் சாமார்த்தியமாய் முடிப்பீர்கள்!

நீங்கள் மகிழ்ச்சியோடிருக்கத் தூய்மையான மனநிலையே போதுமானது; 
உறவுகளைப் பேணி வளர்க்க எதிர்பார்ப்பு இல்லாத மனநிலையே அவசியமானது; 
உயர்நிலையை அடைய உன்னத மனநிலையே உகந்தது!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

 

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.

Tamil Survey Popup Image