இறையுணர்வு! | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

அமைதியில் கடவுளை உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து இன்புறுவதே இறையுணர்வு!

நம்மைச் சூழ்ந்துள்ள காற்றை நாம் காண்பதில்லை எனினும், அதைச் சுவாசிப்பதால் அன்றோ உயிர் வாழ்கிறோம்?
இறையணர்வும் அப்படியே நம்மை வாழவைக்கிறது!

அவரால் நாம் வாழ்கிறோம், அவரில் நாம் வாழ்கிறோம்; அவராலேயே இயங்குகிறோம்; அவராலேயே உயிர் வாழ்கிறோம் என்னும் அடிப்படை உணர்வன்றோ இறையுணர்வு!

இறையுணர்வு இதயத்துக்கு அமைதியை அருளுகிறது; மனதுக்குத் தெளிவைத் தருகிறது; வாழ்க்கைப் பாதைக்கு ஒளியூட்டுகிறது; கண்ணீரை மகிழ்ச்சியாய் மாற்றுகிறது!

நீரில் நீந்தி நிம்மதியாய் வாழும் மீனினைக்  கரையில் தூக்கிப் போட்டால், துடித்துப் போவது போல, இறையுணர்வில்லா மனிதரின் வாழ்வும் இருளாகி, இன்பம் இழக்குமன்றோ?!

வாழ்க வளமுடன் நலமுடன்