இஸ்ரேல் அரசு தலைவருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல் ! | Veritas Tamil

திருத்தந்தை மற்றும் இஸ்ரேல் நாட்டு அரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக் அவர்களுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்துலக மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு மாநிலத்தில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், அங்கு ஒரு நீதியான மற்றும் நிலையான அமைதி நிலவுவதற்கும், சாத்தியமான அனைத்து தூதரகப் பேச்சுவார்த்தை வழிகளையும் மீண்டும் தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை மற்றும் இஸ்ரேல் நாட்டு அரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக் அவர்களுடன்  இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்துலக மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Survey Popup Image