நிழல் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
நிழல்
உங்களின் பிரதிபலிப்பே அன்றி வேறொன்றும் இல்லை.
நிழல் ஒருபோதும் இருளோடு சேர்வதில்லை...
நிழலும் ஒளியுமே நெருங்கிய நண்பர்கள்...!
நிழலைக் கண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஒளி உண்மை என்பதை நிழலே நிரூபிக்கிறது. உங்களைச் சுற்றி ஒளி இருக்கிறது என்பதையே நிழல் எண்பிக்கிறது!
நீங்கள் நிழலைக் காண விரும்பவில்லையெனில் ஒளியை நோக்கி நடங்கள்; நிழல் உங்களுக்குப் பின்னால் சென்று விடும்.
யாரையும் முழுமையாகச் சார்ந்து இருக்காதீர்கள். உங்கள் நிழல் கூட நீங்கள் இருளில் இருக்கும்போது உங்களோடு இருப்பதில்லை!
வெற்றி என்பது நிழலைப்போல... அதை நீங்கள் துரத்தினால் அது உங்களை விட்டு ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் உங்கள் பணியை நேர்மையோடு செய்து கொண்டிருந்தால், அது உங்கள் பின்னே வந்து கொண்டிருக்கும்!
நிழல் ஒருபோதும் நிஜமாவதில்லை. உங்கள் கடந்த கால நிழல் உங்கள் எதிர்காலத்தைப் பாதிப்படையச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
நிழலைக் கண்டு அஞ்சாமல்
இருந்தால், இருள் உங்களை ஒருபோதும் பயமுறுத்தாது! கவலை உங்கள் சிறிய பயங்களையும்கூட பெரிய நிழலாக்கிக் காட்டும்!
வாழ்க வளமுடன் நலமுடன்