வெற்றி பாதைக்கு வழிகாட்டிய இறைவனுக்கு நன்றி - கிறிஸ்தவ கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கருத்து ! | Veritas Tamil

இந்திய கிரிக்கெட் வீரர் Sanju Samson, மார்ச் 1 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற தனது மறக்கமுடியாத ஆட்டத்திற்குப் பிறகு “இறைவனுக்கு நன்றி ” என்று தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

31 வயதான தொடக்க துடுப்பாட்ட வீரரான அவர், தென் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான Super 8 போட்டியில் West Indies அணிக்கு எதிராக 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். 196 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இந்தியா, அவரது ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றியை உறுதி செய்த உடனே, சாம்சன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தி, மைதானத்தில் மண்டியிட்டு சிலுவைச் அடையாளத்தை தன் நெற்றியில்  இட்டார். அரைசதம் அடைந்தபோதும் அமைதியான நன்றிக்குறியாக அதையே செய்திருந்தார்.

போட்டி முடிந்தபின் பேசிய அவர் ,
“என் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளால் நிரம்பியது. ‘நான் முடிக்க முடியுமா?’ என்று என்னையே சந்தேகித்த நேரங்கள் இருந்தன. ஆனாலும் நம்பிக்கையை விடவில்லை. இன்று என்னை ஆசீர்வதித்த ஆண்டவருக்கு நன்றி. இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நாட்களில் ஒன்று.”என தனது வெற்றியின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.

“இது எனக்கு உலகமே போன்றது. நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட நாளிலிருந்து இந்த நாளுக்காக  காத்திருந்தேன். நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்.”என போட்டிக்கான  சிறந்த வீரர் விருது பெற்றபோது அவர் தெரிவித்தார்.

இறுதியாக , சாதனைகளை  தாண்டி, அந்த இரவு நம்பிக்கையைப் பற்றி பேசும் ஒரு வீரரின் ஒரு அழகான நம்பிக்கையூட்டும் தருணமாக அமைந்தது.