இதுவே நம் பாதை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2025

மனிதா உனக்கு

இனி ஒரு பயமில்லை!
சிலுவை உண்டு!

இனி ஒரு தடையில்லை!
வழியுண்டு!

இனி ஒரு குழப்பமில்லை!
தெளிவுண்டு!

இனி ஒரு பலவீனமில்லை!
பலமுண்டு!

இனி ஒரு பிரச்சினையில்லை!
தீர்வு உண்டு!

இனி ஒரு பொய்யில்லை!
நிஜமுண்டு!

இனி ஒரு அவசரமில்லை!
நிதானமுண்டு!

இனி ஒரு தொந்தரவில்லை!
முயற்சியுண்டு!

இனி ஒரு வியாதியில்லை!
ஆரோக்கியமுண்டு!

இனி ஒரு பஞ்சமில்லை!
வளமுண்டு!

இனி ஒரு விரோதமில்லை!
அன்பு உண்டு!

இனி ஒரு சோம்பலில்லை!
விழிப்புண்டு!

இனி ஒரு அறியாமையில்லை!
ஞானமுண்டு!

இனி ஒரு சந்தேகமில்லை!
சமாதானமுண்டு!

இனி ஒரு வீழ்ச்சியில்லை!
எழுச்சி உண்டு!

இனி ஒரு நஷ்டமில்லை!
லாபமுண்டு!

இனி ஒரு கடனில்லை!
தானமுண்டு!

இனி ஒரு அதர்மமில்லை!
தர்மமுண்டு!

இனி ஒரு தோல்வியில்லை!
வெற்றியுண்டு!

இனி ஒரு துக்கமில்லை!
ஆனந்தமுண்டு!

இனி ஒரு ஏமாற்றமில்லை!
மாற்றமுண்டு!

இனி ஒரு அவமானமில்லை!
மரியாதையுண்டு!

இனி ஒரு ஏழ்மையில்லை!
நீங்காத செல்வமுண்டு!

இனி ஒரு ஆபத்தில்லை!
அமைதியுண்டு!

இனி ஒரு இருட்டில்லை!
விடியலுண்டு!

இனி ஒரு விபத்தில்லை!
முன்னேற்றமுண்டு!

இனி ஒரு கோபமில்லை!
குணமுண்டு!

இனி ஒரு மன உளைச்சலில்லை!
தியானமுண்டு!

இனி ஒரு ஊனமில்லை!
உறுதியுண்டு!

இனி ஒரு தயக்கமில்லை!
சந்தர்ப்பமுண்டு!

இனி ஒரு அசட்டுத்தனமில்லை!
சாமர்த்தியமுண்டு!

இனி ஒரு பசியில்லை!
ஆகாரமுண்டு!

இனி ஒரு துரோகமில்லை!
உதவியுண்டு!

இனி ஒரு தீமையில்லை!  
நன்மை உண்டு!

இனி ஒரு அழிவில்லை!  
ஆக்கமுண்டு!

இனி ஒரு அழுகையில்லை!  
பிரார்த்தனையுண்டு!

இனி ஒரு குறையில்லை!  
நிறையுண்டு!

இனி ஒரு வெறுப்பில்லை!  
பக்தியுண்டு!

இனி ஒரு பாவமில்லை!  
இறைவன் உண்டு!

இனி ஒரு தனிமையில்லை!  
மகிழ்ச்சியுண்டு!

இனி ஒரு கவலையில்லை!  
சரணாகதி உண்டு!

இனி ஒரு தேவையில்லை!  
வாழ்வு உண்டு!

இனி ஒரு துன்பமில்லை!

இயேசுவின் வழியுண்டு!
அவர் துணை என்றும் உண்டு!

இனி நிச்சயம் நிம்மதி உண்டு!  
இனி ஒரு மரணமில்லை!

நிறை வாழ்வும் நிலையான வாழ்வும் பெற.
நமக்கு நற்கருணை நாதருண்டு!
நமக்கு இறைவனின் வழித்துணை உண்டு!
நமக்கு இயேசுவின் கல்வாரிப் பாதையுண்டு!

இதுவே நமக்கு இயேசுவின் சிலுவைப் பாதை.

சாமானியன் 
ஞா. சிங்கராயர் சாமி
கோவில்பட்டி