போராட்டம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.04.2025

போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை. போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது.பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து. போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை. இன்று மனிதன் போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான்.
அதைத்தான் விரும்புகிறான்.

வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.

சரியான, நேர்மையான வாழ்க்கைப் பயணப்பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதை தான்.

இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாமில்லாத விமர்சனங்களும் தான் நிறைந்திருக்கும்.

நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும் உங்கள் நற்செயல்களாலும், நற்சிந்தனைகளாலும் மலரும் புதிய மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.

வாழ வாருங்கள்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு நேர்மையும் திறமையும் உழைப்பும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களுக்கு உடல் உள்ள சுகத்துடன் நெடுவாழ்வு வாழவும் நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி