நல்ல சிந்தனைகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.12.2024

நல்ல சிந்தனைகளே இல்லாமல் திருப்பலியில் பங்கு பெறுவதால் பயன் ஏதும் இல்லை. எளியவர்க்கு இரங்கும் போது நமது பிரார்த்தனை தானாகவே நிறைவேறுகிறது.

மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உதவி செய்யும் போது வாழ்க்கை நம் தேவைகளை தானாகவே நிறைவேற்றி விடும்.

அதாவது ஒருவனின் மனம் துய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவனுக்குப் பலன் தராது.

எப்படி சொல்றேன்னா உண்மை பேசுவது அறுவை சிகிச்சை மாதிரி ஆறும் வரை தான்  வலிக்கும் ஆனா ஆறி விடும்.

பொய் பேசுவது வலி நிவாரணி மாதிரி உடனடி ஆறுதல் அளிக்கும். ஆனா காலம் முழுக்கப் பக்கவிளைவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

நம் பேசும் வார்த்தை என்பது
ஏணியைப் போன்றது.

நீங்கள் பயன்படுத்துவதைப்பொறுத்து ஏற்றியும் விடும்.. இறக்கியும் விடும்.

சுருக்கமா சொல்லனும்னா நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூடக் கொல்ல முடியாது. எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட குணப்படுத்த முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நற்சிந்தனையும் நல்லோழுக்கமும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி